அதை நான் உண்மை என்று நம்பி, அந்த லிங்க்கை கிளிக் செய்து வங்கி விவரங்கயும், ஓடிபி எண்ணை செலுத்தியதும், எனது வங்கி கணக்கில் இருந்து ரூ.25 ஆயிரம் திருடப்பட்டுவிட்டது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்தார். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு சைபர் க்ரைம் கூடுதல் டிஜிபி சஞ்சய் குமார், துணை கண்காணிப்பாளர் தெய்வேந்திரன் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஜான் மரிய ஜோசப் மற்றம் 4 காவலர்கள் கொண்ட குழு அமைத்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
அதன்படி தனிப்படையினர், பணத்தை இழந்த பெண்ணின் செல்போனுக்கு எஸ்எம்எஸ் அனுப்பிய செல்போன் எண்ணை வைத்து விசாரணை நடத்திய போது, அது ஜார்கண்ட் மாநிலத்தில் இருப்பதாக சிக்னல் காட்டியது. உடனே தனிப்படை போலீசார் ஜார்கண்ட் மாநில சென்று அம்மாநில போலீசார் உதவியுடன் கிரிடி மாவட்டம் ரட்டபாஹியர் அருகே உள்ள மார் கோடி கிராமத்தில் பதுங்கி இருந்த ஆகாஷ்மண்டல் (21) என்பவரை கைது செய்தனர். அவரை, சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
அதில், இந்திய போஸ்ட் பேமென்ட்ஸ் பேங்க் வாடிக்கையாளர்களை குறிவைத்து மோசடி லிங்க்கை அனுப்பி மோசடி செய்து வந்தது தெரியவந்தது. இந்த மோசடியை கைது செய்யப்பட்ட ஆகாஷ் மண்டல் மற்றும் அவரது நண்பர் முகேஷ் மண்டல் இணைந்து செய்து வந்தது தெரியவந்தது. இந்த மோசடிக்கு பயன்படுத்திய செல்போன் மற்றும் சிம்கார்டுகளை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள முகேஷ் மண்டலை தனிப்படையினர் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
The post எஸ்எம்எஸ் லிங்க் மூலம் ரூ.25 ஆயிரம் மோசடி ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த முக்கிய குற்றவாளி சிக்கினார்: சைபர் க்ரைம் தனிப்படை நடவடிக்கை appeared first on Dinakaran.
