உலக கோப்பையில் முதல் முறையாக: கோஹ்லி டக் அவுட்

இந்திய அணி நட்சத்திர வீரர் விராத் கோஹ்லி (34 வயது), உலக கோப்பை போட்டியில் முதல் முறையாக ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட்டாகி உள்ளார். இங்கிலாந்துக்கு எதிராக லக்னோவில் நேற்று நடந்த போட்டியில், 9 பந்துகளை எதிர்கொண்ட அவர் டேவிட் வில்லி வேகத்தில் பென் ஸ்டோக்ஸ் வசம் பிடிபட்டார். ஒருநாள் போட்டிகளில் கோஹ்லி 16வது முறையாக டக் அவுட்டானார் (275 இன்னிங்ஸ்). இதன் மூலமாக பேட்டிங் வரிசையில் டாப் 7ல் களமிறங்கிய சர்வதேச போட்டிகளில் அதிக முறை டக் அவுட்டான சச்சினின் சாதனையை! கோஹ்லி சமன் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியாக 56 உலக கோப்பை போட்டிகளில் டக் அவுட்டாகாமல் இருந்து வந்த கோஹ்லியின் சாதனைப் பயணம் நேற்று முடிவுக்கு வந்தது.

The post உலக கோப்பையில் முதல் முறையாக: கோஹ்லி டக் அவுட் appeared first on Dinakaran.

Related Stories: