தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் ‘பாரத் சங்கல்ப் யாத்திரை’-க்கு தடை: ஒன்றிய அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு


புதுடெல்லி: தேர்தல் நடைபெறும் ஐந்து மாநிலங்களில் ‘விகாஸ் பாரத் சங்கல்ப் யாத்திரை’யை மேற்கொள்ள வேண்டாம் என்று தலைமை தேர்தல் ஆணையம் ஒன்றிய அரசிடம் கேட்டுக் கொண்டுள்ளது. ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், தெலங்கானா, மிசோரம் ஆகிய மாநிலங்களில் அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. மத்தியில் ஆளும் பாஜக அரசின் கேபினட் செயலர் ராஜீவ் கவுபாவுக்கு, தலைமை தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள கடிதத்தில், ‘தேர்தல் நடைபெறும் ஐந்து மாநிலங்கள் மற்றும் இடைத்தேர்தல் நடைபெறும் நாகாலாந்தின் தாபி தொகுதிக்கு ஒன்றிய அரசின் திட்டங்களை முன்னிலைபடுத்தும் ‘விகாஸ் பாரத் சங்கல்ப் யாத்திரை’ மேற்கொள்ள வேண்டாம்.

தேர்தல் நடத்தை விதிகள் டிசம்பர் 5ம் தேதி வரை அமலில் உள்ளதால், ‘விகாஸ் பாரத் சங்கல்ப் யாத்திரை’-யை அந்த மாநிலங்களில் நடத்தக் கூடாது’ என்று கூறப்பட்டுள்ளது. முன்னதாக இதுகுறித்து ஒன்றிய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை செயலாளர் அபூர்வ சந்திரா கூறுகையில், ‘விகாஸ் பாரத் சங்கல்ப் யாத்திரையானது, தேர்தல் நடைபெறும் மாநிலங்களுக்கு செல்லாது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள மாநிலங்களில் ‘விகாஸ் பாரத் சங்கல்ப் யாத்ரா’ தொடங்கும் திட்டம் எதுவும் இல்லை. அந்த மாநிலங்களில் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்த பின்னர் யாத்திரை தொடங்கப்படும்’ என்றார்.

The post தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் ‘பாரத் சங்கல்ப் யாத்திரை’-க்கு தடை: ஒன்றிய அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: