சமயபுரம் மாரியம்மன் கோயிலில் வருகிற சனிக்கிழமை சந்திரகிரஹணம் என்பதால் மாலை 06.00 மணிக்கு நடை சாத்தப்படும் என அறிவிப்பு

திருச்சி: சமயபுரம் மாரியம்மன் கோயில் வருகிற 28/10/23 ம் தேதி சனிக்கிழமை சந்திரகிரஹணம் என்பதால் அன்று மாலை 06.00 மணிக்கு நடை சாத்தப்பட்டு 29/10/23 ம் தேதி ஞாயிற்றுகிழமை வழக்கம் போல் அதிகாலை 5.30 மணிக்கு நடைதிறக்கப்படும் என சமயபுரம் மாரியம்மன் கோயில் இணை ஆணையர் தெரிவித்துள்ளார். திருச்சிராப்பள்ளி மாவட்டம், சமயபுரம், அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் சக்தி ஸ்தலங்களில் பிரசித்தி பெற்ற பிரார்த்தனை தலமாக விளங்கி வருகிறது.

வருகின்ற 28.10.2023 சனிக்கிழமை பௌர்ணமி தினத்தன்று சந்திர கிரகணம் நிகழ உள்ளதால் பிற்பகல் 03.00 மணிக்கு விளக்கு பூஜையும் அதனை தொடர்ந்து மாலை 05.00 மணிக்கு சாயராட்சை பூஜையும் முடித்து மாலை 06.00 மணிக்கு நடை சாத்தப்படும் என்ற விபரம் தெரிவிக்கப்படுகிறது. மறுநாள் 29.10.2023 ஞாயிற்றுக்கிழமை வழக்கம்போல் 05.30 மணிக்கு நடை திறக்கப்படும் என்ற விபரத்தினையும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் செய்தி வெளியிட்டு தங்களின் மேலான ஒத்துழைப்பை நல்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

The post சமயபுரம் மாரியம்மன் கோயிலில் வருகிற சனிக்கிழமை சந்திரகிரஹணம் என்பதால் மாலை 06.00 மணிக்கு நடை சாத்தப்படும் என அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: