சோழிங்கநல்லூர் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட பூங்கா, விளையாட்டு திடலை திறந்து வைத்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: சென்னை சோழிங்கநல்லூர் மண்டத்திற்குட்பட்ட பகுதிகளில் புதிதாக அமைக்கப்பட்ட பூங்கா, விளையாட்டு திடல் மற்றும் புனரமைக்கப்பட்ட குளத்தினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இன்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். பெருநகர சென்னை மாநகராட்சி, சோழிங்கநல்லூர் மண்டலம், வார்டு-200க்குட்பட்ட செம்மஞ்சேரி பகுதியில் சிங்கார சென்னை 2.0 திட்ட நிதியின்கீழ் ரூ.1.45 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நவீன எரிவாயு தகன மேடையினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து, வார்டு-199க்குட்பட்ட பாலாஜி நகரில் சிங்கார சென்னை 2.0 திட்ட நிதியின்கீழ் ரூ.67.47 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பூங்காவினையும், வார்டு-194ல் சிங்கார சென்னை 2.0 திட்ட நிதியின்கீழ் ரூ.99.95 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட வண்ணன்கேணி, தாச்சன் கேணி குளத்தினையும், வார்டு-196க்குட்பட்ட கண்ணகி நகரில் சிங்கார சென்னை 2.0 திட்ட நிதியின்கீழ் ரூ.87.14 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள விளையாட்டுத் திடலினையும் அமைச்சர் இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

தொடர்ந்து, வார்டு-193க்குட்பட்ட துரைப்பாக்கம் பகுதி ஆனந்தா நகர் மற்றும் வினாயகா மெயின் ரோட்டில் பல்வேறு திட்ட நிதிகளின்கீழ் ரூ.58.25 கோடி மதிப்பீட்டில் 512 சாலைகள் அமைக்கும் பணியினை அமைச்சர் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிகளில், மேயர் ஆர் பிரியா, தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அரவிந்த் ரமேஷ், துணை மேயர் மு.மகேஷ் குமார், தெற்கு வட்டார துணை ஆணையாளர் எம்.பி.அமித், சோழிங்கநல்லூர் மண்டலக்குழுத் தலைவர் வி.இ.மதியழகன் உட்பட பலர் இருந்தனர்.

The post சோழிங்கநல்லூர் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட பூங்கா, விளையாட்டு திடலை திறந்து வைத்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன் appeared first on Dinakaran.

Related Stories: