தசரா விழா எதிரொலி: திண்டுக்கல் மார்க்கெட்டுக்கு வெங்காயம் வரத்து குறைந்ததால் பெரிய வெங்காயம் விலை கிலோவிற்கு ரூ.20 அதிகரிப்பு..!!

திண்டுக்கல்: திண்டுக்கல் வெங்காய மார்க்கெட்டுக்கு வரத்து குறைந்ததால் பெரிய வெங்காயம் விலை கிலோவுக்கு ரூ.20 அதிகரித்துள்ளது. திண்டுக்கல்லில் வெங்காயத்திற்கு என்று தனி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. மார்க்கெட் திங்கள், புதன், வெள்ளி என வாரத்தில் 3 நாட்கள் மட்டும் செயல்படும். கர்நாடக, மகாராஷ்டிரா மாநிலங்களில் தசரா பண்டிகை கொண்டாடத்தால் பெரிய வெங்காயம் வரத்து வெகுவாக குறைந்துள்ளது.

இதன் காரணமாக கிலோவிற்கு ரூ.20 வரை விலை உயர்ந்து கிலோ ரூ.60க்கு விற்பனையாகிறது. வெங்காய வரத்து அதிகரித்து அடுத்த வாரம் விலை குறையும் என்று வியாபாரிகள் கூறியுள்ளனர். திண்டுக்கல், கோவை, திருப்பூர், அரியலூர், பெரம்பலூர், தேனி போன்ற மாவட்டங்களில் இருந்து சின்ன வெங்காயத்தின் வரத்து அதிகரித்ததால் கிலோவுக்கு ரூ.20 குறைந்துள்ளது. கடந்த வாரம் கிலோ ரூ.100க்கு விற்பனையான சின்ன வெங்காயம் தற்போது கிலோ ரூ.80க்கு விற்பனையாகிறது.

The post தசரா விழா எதிரொலி: திண்டுக்கல் மார்க்கெட்டுக்கு வெங்காயம் வரத்து குறைந்ததால் பெரிய வெங்காயம் விலை கிலோவிற்கு ரூ.20 அதிகரிப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: