ஆர்.எம்.ஜெயின் பள்ளி சார்பில் குழந்தைகளுக்கான சேர்க்கை விழா

திருவள்ளூர்: திருவள்ளூர் ஸ்ரீ ஆர்.எம்.ஜெயின் பள்ளிக் குழுமத்தின் சார்பில் விஜயதசமி திருநாளை முன்னிட்டு எழுத்தறிவு பெற சிறந்ததொரு தொடக்கமாக குழந்தைகளுக்கு அக்சராப்யாசம் என்ற தலைப்பில் குழந்தைகளுக்கான சேர்க்கை விழா நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு பள்ளியின் இயக்குநர் கிஷோர்குமார் தலைமை தாங்கினார். அறங்காவலர் அபிநந்தன், கல்வியியல் ஆலோசகர் அஜித்பிரசாத் ஜெயின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதல்வர்கள் ஜெயஸ்ரீ நாராயணன், சுஜித்ரா ரவீந்தரன், துணை முதல்வர் இந்துமதி ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர்.

இந்த விஜயதசமி விழாவை முன்னிட்டு பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் அமர்ந்து கொண்டு அக்சராப்யாசம் செய்துகொண்டனர். அப்போது பள்ளியின் இயக்குனர் கிருஷ்ணகுமார் மற்றும் ஆசிரியர்கள் குழந்தைகளை தங்களது மடியில் அமர வைத்து கையை பிடித்துக் கொண்டு பச்சரிசியில் தமிழ் மொழியின் உயிர் எழுத்தான “அ” என்ற தாய் மொழியின் முதல் எழுத்தையும் “ஓம்” என்ற எழுத்தின் மூலமாகவும் எழுத்துப் பயிற்சியினை கற்றுக் கொடுத்தனர். இதில் பள்ளி ஆசிரியர்கள், அலுவலகர்கள், பல முக்கிய பிரமுகர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் எனப் பெருந் திரளானோர் கலந்துகொண்டு விழாவினைச் சிறப்பித்தனர்.

The post ஆர்.எம்.ஜெயின் பள்ளி சார்பில் குழந்தைகளுக்கான சேர்க்கை விழா appeared first on Dinakaran.

Related Stories: