சட்டீஸ்கர் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களின் குற்ற விவரங்களை வௌியிடவில்லை: தேர்தல் ஆணையத்தில் பாஜ புகார்

ராய்பூர்: சட்டீஸ்கர் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களின் குற்ற விவரங்களை காங்கிரஸ் வௌியிடவில்லை என பாஜ மாநில சட்டப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் ஜெய்பிரகாஷ் சந்திரவன்ஷி ராய்பூரில் உள்ள மாநில தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள மனுவில்,

“உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட 48 மணி நேரத்துக்குள் அவர்களின் குற்ற விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். காங்கிரஸ் அறிவித்த 83 வேட்பாளர்களின் குற்ற பின்னணி பதிவுகளை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கவில்லை. இது உச்ச நீதிமன்ற உத்தரவை மீறும் செயல். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தி உள்ளார்.

* காங்கிரஸ் கண்டனம்
பாஜவின் புகாருக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சட்டீஸ்கர் மாநில காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் தனஞ்சய் சிங் தாக்கூர் கூறியதாவது, “தூய்மையான இமேஜ் கொண்ட காங்கிரஸ் வேட்பாளர்கள் மீது பாஜ பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்துகிறது. குற்ற பின்னணி உள்ளவர்களுக்கு காங்கிரஸ் சீட் தரவில்லை. குற்றவாளிகளை பாதுகாப்பது. அவர்களை தேர்தலில் நிறுத்துவது பாஜவின் குணம். தேர்தல் ஆணைய விதிகளை நாங்கள் கடைப்பிடிப்போம்” என்று தெரிவித்தார்.

The post சட்டீஸ்கர் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களின் குற்ற விவரங்களை வௌியிடவில்லை: தேர்தல் ஆணையத்தில் பாஜ புகார் appeared first on Dinakaran.

Related Stories: