சோளத்தட்டு எரிந்து நாசம்

கெங்கவல்லி, அக்.21: கெங்கவல்லி அருகே சாத்தப்பாடி தெற்குகாடு பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி மகன் ராமசாமி. இவருக்கு சொந்தமான தோட்டத்தில், மாட்டு தீவனத்துக்காக சோளத்தட்டு அடுக்கி போர் வைத்திருந்தனர். நேற்று மதியம் 3 மணியளவில், திaடீரென சோளத்தட்டு தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்த தகவலின் பேரில், கெங்கவல்லி தீயணைப்பு நிலைய அலுவலர்(பொ) வேலுமணி தலைமையிலான வீரர்கள் விரைந்து சென்று, அருகில் உள்ள பயிர்களுக்கு பரவாமல் சுமார் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் சுமார் ₹20 ஆயிரம் மதிப்பிலான சோளத்தட்டு எரிந்து நாசமானது.

The post சோளத்தட்டு எரிந்து நாசம் appeared first on Dinakaran.

Related Stories: