பாலக்காடு : பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணிற்கு 58 ஆண்டுக்குப்பின் இந்திய பிரஜை என்ற சான்றிதழை மாவட்ட கலெக்டர் சித்ரா வழங்கினார். பாலக்காடு மாவட்டம் கஞ்சிக்கோட்டை அடுத்த புதுச்சேரியைச் சேர்ந்தவர் ராதா. இவரது தாய், தந்தை வேலைக்காக மலேசியா சென்றவர்கள். இந்த தம்பதியினருக்கு கடந்த 1964ம் ஆண்டு மலேசியாவிலேயே ராதா என்ற பெண் குழந்தை பிறந்துள்ளார். பிறப்பிற்குப்பின் தாயும், ராதாவும் சொந்த ஊரான பாலக்காடு மாவட்டம் பத்திரிப்பாலாவிற்கு திரும்பி வந்துள்ளனர்.
ராதா சொந்த ஊரான பத்திரிப்பாலாவில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு வரை படித்துள்ளார். கடந்த 1980ம் ஆண்டு ராதா மலேஷியா சென்றுள்ளார். 1981ம்ஆண்டு திரும்ப ஊருக்கு வந்துள்ளார். இதனை தொடர்ந்து 1988ம் ஆண்டு இந்திய பிரஜை என்பதற்கு ராதா, கேரளா அரசிடம் விண்ணத்துள்ளார்.
பின்பு கஞ்சிக்கோடு தொழிற்பேட்டையில் தனியார் நிறுவனத்தில் வேலைப்பார்க்கின்ற ராதாகிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்துகொண்டுள்ளார். அதற்குப்பின் கணவருடன் கஞ்சிக்கோடு புதுச்சேரி வீட்டில் வசித்து வந்துள்ளார். 58 ஆண்டுகள் தொடர்ச்சியாக இந்தியாவில் வளர்ந்த இவருக்கு தற்போது இந்திய பிரஜை என்ற சான்றிதழை மாவட்ட கலெக்டர் சித்ரா, ராதாவிற்கு நேற்று வழங்கினார்.
The post பாலக்காடு பெண்ணிற்கு 58 ஆண்டுக்குப்பின் இந்திய பிரஜை சான்றிதழ் appeared first on Dinakaran.
