தேவியரின் நவராத்திரி திருவிழா!

நவராத்திரி என்றால் ஒன்பது இரவு என்று பொருள். ஒன்பது ராத்திரிகள் அம்பிகையை வழிபடக்கூடிய உன்னதமான விழாதான் நவராத்திரி திருவிழா. அம்பாள் மகிஷாசூரனை வதம் செய்வதற்காக ஒன்பது நாட்கள் தவம் இருந்த காலம்தான் இந்த நவராத்திரி. இந்த நாட்களில் பெண்கள் எவ்வாறு பூஜிக்க வேண்டும் என்று தெரிந்து கொள்ளலாம்.

* நவராத்திரி நாட்களில் பெண்கள் கன்யா பூஜை செய்வதால் சகல செல்வங்களையும் பெறலாம்.

* இரவு 7 மணி முதல் 9.30 மணி வரை தேவி வழிபாடு செய்ய உகந்த நேரமாகும்.

* ஈசனும், அம்மையும் ஒன்று சேர்ந்து ஊஞ்சலில் ஆடுகின்ற தரிசனத்தை 9 நாட்களும் கண்டால் நவராத்திரி பூஜை செய்த பலன் கிடைக்கும்.

* சப்தமி திதியன்று வழிபட்டால் ஸ்ரீஹயக்ரீவப் பெருமாளின் அருளைப் பெறலாம். அன்று ஸ்ரீலலிதா சகரஸ்ர நாமத்தையும் நவாக்சரி மந்திரத்தையும் ஓதுவது கூடுதல் பலன்களை தரும்.

* வீட்டில் கொலு வைப்பதால், அம்பிகை அனைத்து அம்சமாக நம் வீட்டில் எழுந்தருள்வாள் என்பது ஐதீகம்.

* நவராத்திரி பூஜையை அஸ்தம், சித்திரை அல்லது மூலம் நட்சத்திர நாட்களில் தொடங்குவது நல்லது. இந்த நாட்களில் வைதிருதி யோக நேரம் இருந்தால் மிகவும் நல்லது.

* புரட்டாசி மாதத்தை எமனின் கோரை பல் என்று அக்னி புராணம் சொல்கிறது. இந்த மாதம் எமனின் பாதிப்பில் இருந்து தப்பவே நவராத்திரி விழாவாக கொண்டாடப்படுகிறது.

* நவராத்திரி நாட்களில் பகலில் சிவ பூஜையும் இரவில் அம்பிகை பூஜையும் செய்வதே சரியான வழிபடாகும். நவராத்திரி 9 நாட்களும் தினமும் பகலில் 1008 சிவ நாமாவளிகளை ஜெபித்து வழிபட்டால் அளவிடற்கரிய பலன்கள் கிடைக்கும்.

* ஒன்பது நாட்களிலும் தேவியாக பாவித்துத் துதிக்க, நமக்குச் சொந்தமல்லாத, பிறர் வீட்டுக் குழந்தையையே அழைத்து வந்து உபசரிக்க வேண்டும். நம் வீட்டு அல்லது நம் உறவினர்களின் குழந்தைகளையே தேர்ந்தெடுப்பது கூடாது.

* தினந்தோறும் பூஜையின் நிறைவாக, மங்கலப் பொருட்களை (மஞ்சள், குங்குமம், வளையல், ரிப்பன் போன்றவை) ஏழைகளுக்கு தானமாக அளிக்க வேண்டும்.

* கன்னிப் பெண்களுக்குப் புதிய ஆடையினை பரிசாக அளித்தால் நல்ல பலன் கிட்டும்.

* நவதானிய சுண்டல் நவக்கிரக நாயகர்களை திருப்திப்படுத்தும்.

* லஷ்மி பூஜை நவராத்திரி நாளில் வரும் வெள்ளிக்கிழமையில் செய்தால் ஐஸ்வர்யம் பெருகும்.

சுகமான வாழ்வு, கல்வியில் சிறந்து விளங்க, உயர்வு பெற, தொழிலில் வெற்றி கிட்ட நவராத்திரி பூஜையை செய்து வளம் பெறுங்கள்.

ஒன்பது நாளும் ஒன்பது கோலங்கள்!

*முதல் நாள் – அரிசி மாவு கோலம்
*இரண்டாம் நாள் – கோதுமை மாவு கட்டம் கோலம்
*மூன்றாம் நாள் – மலர் கோலம்
*நான்காம் நாள் – படிக்கட்டு கோலம்
*ஐந்தாம் நாள் – கடலை கொண்டு பறவையின் கோலம்
*ஆறாம் நாள் – பருப்பு கொண்டு தேவி நாமம் கோலம்
*ஏழாம் நாள் – வெள்ளை மலர்கள் கொண்ட கோலம்
*எட்டாம் நாள் – தாமரைக் கோலம்
*ஒன்பதாம் நாள் – வாசனைப் பொடிகளை கலந்த கோலம்.

அம்பாளுக்கு அணிவிக்க வேண்டிய பூக்கள்

*முதல் நாள் – மல்லிகை
*இரண்டாம் நாள் – முல்லை
*மூன்றாம் நாள் – செண்பகம், மரு
*நான்காம் நாள் – ஜாதிமல்லி
*ஐந்தாம் நாள் – பாரிஜாதம் அல்லது வாசனை மலர்கள்
*ஆறாம் நாள் – செம்பருத்தி
*ஏழாம் நாள் – தாழம்பூ, பாரிஜாதம், விபூதிப்பச்சிலை
*எட்டாம் நாள் – சம்பங்கி, மருதாணிப்பூ
*ஒன்பதாம் நாள் – தாமரை, மரிக்கொழுந்து.

கொலு பிரசாதங்கள்

*முதல் நாள் – சுண்டல், வெண்பொங்கல்
*இரண்டாம் நாள் – புளியோதரை
*மூன்றாம் நாள் – சர்க்கரைப் பொங்கல்
*நான்காம் நாள் – கதம்ப சாதம்
*ஐந்தாம் நாள் – தயிர் சாதம், பொங்கல்
*ஆறாம் நாள் – தேங்காய் சாதம்
*ஏழாம் நாள் – எலுமிச்சை சாதம்
*எட்டாம் நாள் – பால் சாதம்
*ஒன்பதாம் நாள் – அக்கார அடிசில், பால் பாயசம், சர்க்கரைப் பொங்கல்.

விருந்தினருக்கான பழங்கள்

*முதல் நாள் – வாழைப்பழம்
*இரண்டாம் நாள் – மாம்பழம்
*மூன்றாம் நாள் – பலாப்பழம்
*நான்காம் நாள் – கொய்யாப்பழம்
*ஐந்தாம் நாள் – மாதுளை
*ஆறாம் நாள் – ஆரஞ்சு
*ஏழாம் நாள் – பேரீச்சம்பழம்
*எட்டாம் நாள் – திராட்சை
*ஒன்பதாம் நாள் – நாவல் பழம்.

தொகுப்பு: பிரியா மோகன்

The post தேவியரின் நவராத்திரி திருவிழா! appeared first on Dinakaran.

Related Stories: