சுத்தமான, சூடான குடிநீர் முக்கியம் பருவ மழைக்காலத்தில் நோய் அதிகரிக்கும்: பொதுமக்களுக்கு பொதுசுகாதாரத் துறை எச்சரிக்கை

சென்னை: ‘‘வடகிழக்கு பருவமழை அடுத்த வாரம் தொடங்க இருக்கும் நிலையில், மழைக்கால நோய் அதிகரிக்கும்’’ என தமிழ்நாடு பொதுசுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ளது. மாநிலத்தில் ஏற்கனவே மாறுபட்ட சீதோஷண நிலையின் காரணமாக சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் காய்ச்சல் ஏற்பட்டு சிகிச்சைக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் விரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்க இருப்பதால் காற்றில் ஈரப்பதம் அதிகரிக்கும், குளிர்ச்சியான சூழ்நிலை சிலருக்கு அலர்ஜியை உண்டாக்கும், சளி மற்றும் இருமல் பிரச்னைகளால் அதிகரிக்கும். இன்ஃப்ளூயன்சா வைரஸ் காரணமாக சளி, இருமல் வரும். மேலும் மழைக்கால நோய்களான டெங்கு, மலேரியா, டைப்பாய்டு, சிக்கன்குனியா, யானைக்கால் நோய் டிசம்பர் மாதம் வரை அதிகரிக்கும் என பொதுசுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பொதுசுகாதாரத்துறை உயர் அதிகாரி கூறியதாவது;

மழைக்கால நோய்களை தடுப்பதற்கு அனைத்து வகையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் டிசம்பர் மாதம் வரை மழைக்கால நோய்கள் தொடர்ந்து அதிகரிக்கும். அதை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளான தேவையான மருந்து, போதுமான மருத்துவர்கள் என தயார் நிலையில் உள்ளது.  மழை அதிக அளவில் பெய்த பிறகு அதற்கு அடுத்த 2 நாள் பாதிப்பு என்பது சற்று அதிகமாக இருக்கும்.

அதை கட்டுப்படுத்த சிறப்பு முகாம் மற்றும் அச்சூழலை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து மருத்துவ பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்படும். சுத்தமான குடிநீர் முக்கியம் எனவே மக்கள் சுத்தமான குடிநீர் அருந்தவேண்டும். மழைக்காலத்தில் சில முறை மருத்துவர்கள் ஆரம்ப சுகாதாரநிலையதற்கு வருவது கடினமாகுகிறது. எனவே அதற்கு ஏற்றார் போல் அட்டவணை போடப்படும். குறிப்பாக கர்ப்பிணிகளை முன்கூட்டியே மருத்துவமனையில் அனுமதிக்க கூறிவிடுவோம்.

The post சுத்தமான, சூடான குடிநீர் முக்கியம் பருவ மழைக்காலத்தில் நோய் அதிகரிக்கும்: பொதுமக்களுக்கு பொதுசுகாதாரத் துறை எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: