புதுச்சேரி: கோஷம் மத உணர்வு சார்ந்தது அல்ல என கவர்னர் தமிழிசை கூறியுள்ளார். குஜராத்தில் நடந்த இந்தியா- பாகிஸ்தான் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின்போது, பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் அவுட்டதாகி வெளியேறியபோது ெஜய் ராம் என ரசிகர்கள் கோஷம் எழுப்பியது ெதாடர்பாக கடும் விமர்சனம் எழுந்துள்ளது. இதுபற்றி புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை நேற்று அளித்த பேட்டியில், ”அப்துல்கலாம் எழுதிய சுயசரிதையில், விண்கலம் மேல் எழும்போது தலைமை விஞ்ஞானி முதற்கொண்டு சாதாரண ஊழியர் வரை எல்லோரும் வந்தே மாதரம் என கோஷம் எழுப்பினர். வெற்றி என்று வரும் போது அதன் உள்ளுணர்வோடு கூறியிருப்பதாக கூறியுள்ளார். ஜெய் ராம் என்று கூறி நமது நாட்டின் வெற்றியை குறிக்கும்போது மதம் இருந்ததாக பார்க்கவில்லை. வெற்றி உணர்வு இருந்ததாக மட்டுமே பார்க்கிறேன்” என்றார்.
The post ஜெய் ராம்’ கோஷம் மத உணர்வு சார்ந்தது அல்ல: கவர்னர் தமிழிசை சொல்கிறார் appeared first on Dinakaran.
