பாடாலூர் அருகே செட்டிக்குளத்தில் கறிக்கடையில் அலை மோதிய மக்கள் கூட்டம்

பாடாலூர்: புரட்டாசி மாதத்தை பெருமாள் சுவாமியை இஷ்ட தெய்வமாக வணங்கும் குடும்பத்தினர் விரத மாதமாக கடைப்பிடிக்கின்றனர். இதில் அசைவ உணவை தவிர்த்து, சனிதோறும் விரதமிருந்து, கோயில்களுக்கு சென்று வழிபடுவர். இதனால் ஒரு மாதமாக, அசைவ உணவுகளான, ஆடு, கோழி, மீன் விற்பனை படு மந்தமாக இருந்தது. புரட்டாசி முடிவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமையான நேற்று ஏராளமானோர் கறிக்கடைகளின் கறி வாங்க குவிந்தனர். இதனால், காலை முதலே, கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகாவில் உள்ள செட்டிகுளம், பாடாலூர், ஆலத்தூர்கேட், கொளக்காநத்தம், மேலமாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில், இறைச்சி வியாபாரம் களை கட்டியது. ஆட்டுக்கறி ரூ.800 , பிராய்லர் கோழிக்கறி ரூ.180முதல் 200, நாட்டுக்கோழிக்கறி ரூ.350 முதல் 400 , மீன் ரூ.200 முதல் 250 வரை விற்பனையானது. அதிகமான மக்கள் காத்திருந்து கறிகளை வாங்கி சென்றனர்.

The post பாடாலூர் அருகே செட்டிக்குளத்தில் கறிக்கடையில் அலை மோதிய மக்கள் கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: