ரூ.42 கோடி சிக்கிய விவகாரம் சிபிஐ விசாரிக்க வேண்டும்: கர்நாடகா மாஜி முதல்வர் வலியுறுத்தல்

பெங்களூரு: கர்நாடக முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை பெங்களூருவில் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘காங்கிரஸ் கட்சி ஆட்சியமைத்ததில் இருந்து பணியிடமாற்றம் முதல் அனைத்திலும் ஊழல் நடந்துள்ளது. ஒப்பந்ததாரர்களுக்கான நிலுவைத்தொகை விடுவிக்கப்பட்டவுடனேயே ஒப்பந்ததாரர் ஒருவரின் வீட்டில் இவ்வளவு பெரிய தொகை சிக்கியிருப்பது இதுவே முதல் முறை. காங்கிரஸ் அரசு 10% கமிஷன் பெற்றுள்ளது நிரூபணமாகியுள்ளது. கடந்த ஆண்டு ஒப்பந்ததாரர்கள் எந்த ஆதாரமும் இல்லாமல் பாஜ அரசு மீது குற்றம்சாட்டினர். ஆனால் இப்போது ஒப்பந்ததாரர் சங்கம் காங்கிரஸ் அரசின் கமிஷன் சேகரிப்பு மையமாக திகழ்கிறது. ஒப்பந்ததாரர்களும் அரசும் சேர்ந்து மாநிலத்தை கொள்ளையடித்திருக்கின்றனர். பணமோசடி சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை விசாரணை நடத்த வேண்டும். ஊழல் குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும்’ என்றார்.

The post ரூ.42 கோடி சிக்கிய விவகாரம் சிபிஐ விசாரிக்க வேண்டும்: கர்நாடகா மாஜி முதல்வர் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: