அரசு பள்ளியில் கலைத்திருவிழா

சேந்தமங்கலம், அக்.12: ேந்தமங்கலம் ஒன்றியம், பேளுக்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளியில், பள்ளிக்கல்வி துறையின் சார்பில் கலைத்திருவிழா நடத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் மணிமேகலை தலைமை வகித்தார். உதவி தலைமையாசிரியர் சுமதி முன்னிலை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் நல்லு ராஜேந்திரன், கலைத் திருவிழாவை தொடங்கி வைத்து, பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு வைத்தார். இதில் மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. இதில் பாரம்பரிய நடனம், பறை இசைத்தல், சிலம்பம், கிராமிய நடனம், நாடகம், தாரை தப்பட்டை வாசித்தல் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகளை செய்து காட்டினர். விழாவில் ஊராட்சி மன்ற தலைவர் செல்வம் அபிமன்னன், ஒன்றிய குழு உறுப்பினர் சரசு திராவிடமணி, பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள், பள்ளி மேலாண்மை குழு தலைவர், உறுப்பினர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர் வரதராஜன் செய்திருந்தார்.

The post அரசு பள்ளியில் கலைத்திருவிழா appeared first on Dinakaran.

Related Stories: