அரியலூர் மாவட்டத்தில் பட்டாசு கடைகளை கண்காணிக்க சிறப்பு தனிக்குழு

அரியலூர்:அரியலூர் மாவட்டத்தில் பட்டாசு உற்பத்தி மற்றும் பட்டாசு விற்பனைக் கடைகளை கண்காணிக்க சிறப்பு தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார் இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்தெரிவித்ததாவது: ஊரகம் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் செயல்பட்டுவரும் பட்டாசு உற்பத்தி அலகு மற்றும் பட்டாசு விற்பனைக்கடைகள் (தற்காலிகக்கடைகள் உட்பட) நடத்திட வெடிபொருள் சட்டத்தின்படி தீயணைப்புத்துறை, காவல்துறை, வருவாய்த்துறை மற்றும் தொழில் பாதுகாப்புத்துறையின் தடையின்மைச்சான்று பெற்று உரிமம் பெறப்படவேண்டும்.மேலும், உரிமம் பெற்ற பின்பு உரிமத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அளவின் படி இருப்பு வைத்துக்கொள்ளவும் மற்றும் அனைத்து பாதுகாப்புகள் குறித்த நடவடிக்கைகளை தவறாது கடைபிடிக்க வேண்டும். உரிமதாரர்கள் உரிமத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகள் கடைபிடிக்கப்படாமல் உள்ள நேர்வுகளில் உரிமம் ரத்து செய்யப் படுவதுடன் சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.மேலும், உரிமம் இன்றி, புதுப்பிக்கப் படாமல் இது போன்று உற்பத்தி அலகுகள் மற்றும் விற்பனைக்கடைகள் செயல்படுவது தெரியவந்தால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவற்றை ஆய்வு செய்ய சிறப்பு தனிக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

The post அரியலூர் மாவட்டத்தில் பட்டாசு கடைகளை கண்காணிக்க சிறப்பு தனிக்குழு appeared first on Dinakaran.

Related Stories: