இந்திய அஞ்சல் துறையின் வருவாய் அதிகரித்துள்ளது: முதன்மை அஞ்சல்துறை தலைவர் சாருகேசி தகவல்

சென்னை: இந்திய அஞ்சல் துறையின் வருவாய் அதிகரித்துள்ளதாக முதன்மை அஞ்சல்துறை தலைவர் சாருகேசி தெரிவித்துள்ளார். இது குறித்து முதன்மை அஞ்சல்துறை தலைவர் சாருகேசி கலந்துகொண்டு நிருபர்களுக்கு அளித்த பேட்டி: நாட்டின் சமூக பொருளாதார வளர்ச்சியில், இந்திய அஞ்சல் துறையின் வளர்ந்து வரும் பங்களிப்பை வெளிப்படுத்தும் விதமாக திட்டமிடப் பட்டுள்ளது.

மக்களுக்கு சேவை அளிப்பதில், ஒருங்கிணைந்த ஒற்றைத் தீர்வாக மாறி வரும் அஞ்சல்துறையின் பலதரப்பட்ட நவீன சேவைகளான, நிதி அதிகாரமளிப்பு, அஞ்சல் ஏற்றுமதி முனையம், மின் வணிகத்திற்கான திறந்த வலைப்பின்னல், அமேசான் மற்றும் பிற சில்லறை வணிகர்களுடன் இணைந்து செயலாற்றும் வண்ணம் மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தங்கள் உள்ளிட்ட அஞ்சல் மற்றும் பார்சல் சேவைகள் மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கான (அந்தியோதயா) ஒருங்கிணைந்த சேவைகள் ஆகியவற்றைப் பற்றி கடைக் கோடி மக்களுக்கும், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோருக்கும் எடுத்துரைத்து நெறிப் படுத்தும் விதமாக இந்த ஆண்டு அஞ்சல் வார விழா நிகழ்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன.

மேலும் புதிய கணக்குகள் தொடங்குவதில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது. 2021-2022 ஆம் ஆண்டில் இந்திய அஞ்சல் துறையின் வருவாய் 1111.68 கோடியாக இருந்தது. ஆனால் 2022-2023 ஆண்டில் இந்திய அஞ்சல் துறையின் வருவாய் 1253.63 கோடியாக உள்ளது. இது கடந்த ஆண்டைவிட 141 கோடி அதிகமான வருவாயை எட்டியுள்ளது.  நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களுக்குத்தான் எங்களின் தேவைகள் அதிக அளவில் உள்ளது. கிராமப்புறங்களில் அஞ்சல் துறையின் பங்கு அதிகரித்து வருகிறது. அதன் அடிப்படியில் குறிப்பாக கிராமப்புறங்களில் வசிக்கும் பொதுமக்கள் இந்திய அஞ்சல் துறையுன் காப்பீட்டு திட்டங்கள் மூலம் பெரும் பயனை அடைந்து வருகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post இந்திய அஞ்சல் துறையின் வருவாய் அதிகரித்துள்ளது: முதன்மை அஞ்சல்துறை தலைவர் சாருகேசி தகவல் appeared first on Dinakaran.

Related Stories: