சென்னிமலையில் ஆதிநாராயண பெருமாள் கோயிலில் புரட்டாசி விழா

 

ஈரோடு, அக்.9: ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே மேலப்பாளையத்தில், இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஆதிநாராயண பெருமாள் கோயிலில் நேற்று புரட்டாசி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு அலர்மேலு மங்கை, நாச்சியார் அம்மை சமேத ஆதிநாராயண பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. தொடர்ந்து, சென்னிமலை கைலாசநாதர் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அங்கு நாதஸ்வர தமிழிசை கச்சேரி நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து, திரளான பக்தர்கள் சீர்வரிசை தட்டுகள் எடுத்து, நாதஸ்வர தவில் இசை கச்சேரியுடன் 4 ராஜ வீதிகளில் வலம் வந்து ஆதிநாராயண பெருமாள் கோயிலுக்கு சென்றனர். அங்கு திருக்கல்யாண உற்சவம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். வரும் 14ம் தேதி காலை 5 மணிக்கு உற்சவர் மற்றும் மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும், இதனைத்தொடர்ந்து மகா தீபாராதனை நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது. காலை 10 மணிக்கு சகடை தேரில், மேள வாத்திய பஜனையுடன் உற்சவ மூர்த்திகளின் ஊர்வலம் நடைபெறும்.

The post சென்னிமலையில் ஆதிநாராயண பெருமாள் கோயிலில் புரட்டாசி விழா appeared first on Dinakaran.

Related Stories: