நாடு முழுவதும் பெண் நீதிபதிகள் எண்ணிக்கை அதிகரிப்பு: தலைமை நீதிபதி தகவல்

புதுடெல்லி:உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவரும், மூத்த வழக்கறிஞருமான விகாஸ் சிங், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டுக்கு கடிதம் எழுதி இருந்தார். அதில், நீதித்துறையில் பணியாற்றும் நீதிபதிகளின் பதவிகளில் மூன்றில் ஒரு பங்கை பெண்களுக்கு ஒதுக்கிட வேண்டும். குறிப்பாக பாட்னா, உத்தரகாண்ட், திரிபுரா, மேகாலயா, மணிப்பூர் ஆகிய உயர்நீதிமன்றங்களில் ஒரு பெண் நீதிபதி கூட தற்போது வரையில் கிடையாது. அதனால் பெண் நீதிபதிகளை அதிகரிக்கும் வகையில் உச்ச நீதிமன்றம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்,” என தெரிவித்திருந்தார்.

இதேபோன்று உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர்களாக இருக்கும் துஷ்யந்த் தவே உட்பட சில வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றத்தில் பெண் நீதிபதிகளின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் முன்னிலையில் வலியுறுத்தினர்.இதற்கு அவர் தெரிவித்த பதிலில்,\\” எங்களது தரப்பில் இருந்து ஒரு முக்கியமான மற்றும் மகிழ்ச்சியான செய்தி ஒன்றை பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம்.

அதாவது மகாராஷ்டிராவில் சிவில் நீதிபதி ஜூனியர் பிரிவை சேர்ந்த 75 நீதிபதிகள் உள்ளனர். அவர்களில் 42 பெண்கள், 33 ஆண்கள் இருக்கின்றனர். இதே நிலை மற்ற மாநிலங்களிலும் இருக்கிறது. இதில் பெண் நீதிபதிகளின் எண்ணிக்கையை மேலும் உயர்த்தும் விதமாக நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக பெண் நீதிபதிகளை கணிசமான அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை நாடு முழுவதும் உள்ளது,’’ என்று தெரிவித்தார்.

The post நாடு முழுவதும் பெண் நீதிபதிகள் எண்ணிக்கை அதிகரிப்பு: தலைமை நீதிபதி தகவல் appeared first on Dinakaran.

Related Stories: