ராஜஸ்தான் மாநிலத்தில் ரூ.5,000 கோடி நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

ஜெய்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் ரூ.5,000 கோடி நலத்திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். ராஜஸ்தான் ஜோத்பூரில் சாலை, ரயில், விமான போக்குவரத்து என ரூ.5,000 கோடி திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்களில் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, காலை 11.15 மணியளவில், ராஜஸ்தானின் ஜோத்பூரில், சாலை, ரயில், விமானப் போக்குவரத்து, சுகாதாரம் மற்றும் உயர் கல்வி போன்ற துறைகளில் சுமார் ரூ.5000 கோடி மதிப்புள்ள பல வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

பின்னர் ராஜஸ்தானில் இரண்டு புதிய ரயில் சேவைகளை பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் ஜெய்சால்மரை டெல்லியுடன் இணைக்கும் புதிய ரயில் – ருனிச்சா விரைவு ரயில் மற்றும் மார்வார் சந்திப்பு- காம்ப்ளி படித்துறையை இணைக்கும் புதிய பாரம்பரிய ரயில் ஆகியவை இதில் அடங்கும்.

ருனிச்சா விரைவு ரயில், ஜோத்பூர், தேகானா, குச்சமான் சிட்டி, புலேரா, ரிங்காஸ், ஸ்ரீமதோபூர், நீம் கா தானா, நர்னால், அடேலி, ரேவாரி வழியாக செல்லும். மார்வார் சந்திப்பு-காம்ப்ளி படித்துறையை இணைக்கும் புதிய பாரம்பரிய ரயில், சுற்றுலாவுக்கு உத்வேகம் அளிக்கும் மற்றும் இப்பகுதியில் வேலைவாய்ப்பை உருவாக்கும்.

மேலும் இரண்டு ரயில் திட்டங்களை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். 145 கி.மீ நீளமுள்ள ‘தேகானா-ராய் கா பாக்’ ரயில் பாதையை இரட்டிப்பாக்கும் திட்டங்களும், 58 கி.மீ நீளமுள்ள ‘தேகானா-குச்சமன் சிட்டி’ ரயில் பாதையும் இதில் அடங்கும்.

The post ராஜஸ்தான் மாநிலத்தில் ரூ.5,000 கோடி நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி appeared first on Dinakaran.

Related Stories: