234 ஆண்டுகால வரலாற்றில் முதன்முறை: அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் கெவின் அதிரடி பதவி நீக்கம்.. சொந்த கட்சியினரால் தூக்கியெறியப்பட்டார்..!!

வாஷிங்டன்: அமெரிக்கா அடுத்த ஆண்டு அதிபர் தேர்தலை எதிர்கொண்டிருக்கும் நிலையில், அந்நாட்டு நாடாளுமன்றத்தின் சபாநாயகர் கெவின் மெக்கார்த்தி அதிரடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். குடியரசு கட்சியை சேர்ந்த அமெரிக்க பிரதிநிதிகள் சபை சபாநாயகர் கெவின் மெக்கார்த்தி, தொடர்ந்து ஜனநாயக கட்சியுடன் இணக்கமாக செல்வதாக பரவலாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து கெவின் மெக்கார்த்திக்கு எதிராக அவர் சார்ந்துள்ள குடியரசு கட்சியே பதவி நீக்க தீர்மானத்தை கொண்டுவந்தது.

விவாதத்தின் பின் நடைபெற்ற வாக்கெடுப்பில் 216 வாக்குகள் பெற்று தீர்மானம் வெற்றிபெற்றதை அடுத்து பிரதிநிதிகள் சபை சபாநாயகர் கெவின் மெக்கார்த்தி, பதவி நீக்கம் செய்யப்பட்டார். ஆளுங்கட்சிக்கு சாதகமான கெவின் மெக்கார்த்தியின் நடவடிக்கைகள் குறித்து பலமுறை எச்சரிக்கப்பட்டதாகவும், ஆனால் அவற்றை அவர் மதிக்காததே பதவி நீக்க தீர்மானம் கொண்டுவர முக்கியமான காரணம் என்றும் குடியரசு கட்சி தலைவர்கள் கூறினர்.

234 ஆண்டுகால வரலாற்றில் முதன்முறையாக அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அதுவும் சொந்த கட்சியினரே சபாநாயகருக்கு எதிராக வாக்களித்து அவரை வெளியேற்றி இருப்பது அமெரிக்க அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post 234 ஆண்டுகால வரலாற்றில் முதன்முறை: அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் கெவின் அதிரடி பதவி நீக்கம்.. சொந்த கட்சியினரால் தூக்கியெறியப்பட்டார்..!! appeared first on Dinakaran.

Related Stories: