கூட்டணி முடிஞ்சு போச்சு!: தொகுதி பிரச்சினைக்காகவே அதிமுக எம்.எல்.ஏ.க்கள் நிர்மலா சீதாராமனை சந்தித்தனர்..வானதி சீனிவாசன் விளக்கம்..!!

சென்னை: தொகுதி பிரச்சினைக்காகவே அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சந்தித்தனர் என பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் விளக்கம் அளித்துள்ளார். ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமனை, அதிமுக எம்.எல்.ஏ.க்கள் திடீரென சந்தித்தது ஏன்? என கேள்வி எழுந்தது. பாஜகவுடன் கூட்டணி இல்லையென அதிமுக அறிவித்திருந்த நிலையில், நேற்று கோவையில் ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் சந்திப்பு நடைபெற்றது.

டெல்லியில் பாஜக தலைவர்களை சந்தித்த நிலையில், அண்ணாமலை நேற்று தமிழகம் திரும்பினார். நாளை நடைபெறும் பாஜக மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் அண்ணாமலை பங்கேற்கிறார். இதனிடையே, சேலத்தில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உடன் முக்கிய நிர்வாகிகள் சந்திப்பு நடைபெற்றது. முன்னாள் அமைச்சர்கள் உதயகுமார், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோர் தனித்தனியாக ஈ.பி.எஸ் உடன் ஆலோசனை நடத்தினர். சென்னையில் ஆதரவாளர்களுடன் இன்று ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்துகிறார். முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.

இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், கோவையில் நேற்று நடந்தது அரசு நிகழ்ச்சி. அதற்கு அரசு பிரதிநிதிகள் வருவது சகஜம். அரசியல் சம்பந்தப்பட்டது அல்ல என்று விளக்கம் அளித்தார். தொகுதி பிரச்சினைக்காகவே அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சந்தித்தனர் என்று கூறினார். அதிமுகவுடன் கூட்டணி இருக்கா? இல்லையா? என்ற கேள்விக்கு எல்லாம் முடிஞ்சு போச்சு என வானதி சீனிவாசன் பதில் அளித்தார்.

The post கூட்டணி முடிஞ்சு போச்சு!: தொகுதி பிரச்சினைக்காகவே அதிமுக எம்.எல்.ஏ.க்கள் நிர்மலா சீதாராமனை சந்தித்தனர்..வானதி சீனிவாசன் விளக்கம்..!! appeared first on Dinakaran.

Related Stories: