மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு கரூர் லைட்ஹவுஸ் கார்னர் அருகே தண்ணீரில் இயங்கும் வெல்டிங் மிஷினுக்கு ஒப்புதல் கேட்டு தர்ணா

கரூர்: கரூர் லைட்ஹவுஸ் கார்னர் அருகே திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கரூர் லைட்ஹவுஸ் கார்னர் பகுதியை ஒட்டியுள்ள அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகள் கொண்ட பகுதியின் முன்பாக 35 வயது மதிக்கத்தக்க ஒருவர் நேற்று காலை 10 மணியளவில் திடீரென அமர்நது தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தகவலறிந்த டவுன் போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். விசாரணையில், திருச்சி மாவட்டத்தை சேர்ந்த ரகுநாதன் (32) வெல்டிங் பட்டறை தொழிலாளி. இவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, தண்ணீரில் இயங்கும் வெல்டிங் மிஷினை கண்டுபிடித்ததாகவும், அதற்கு முறையான முறையில் அரசு ஒப்புதல் வழங்காமல் உள்ளது. எனவே, அதனை செயல் வடிவத்துக்கு கொண்டு வர அரசு அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார்.

The post மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு கரூர் லைட்ஹவுஸ் கார்னர் அருகே தண்ணீரில் இயங்கும் வெல்டிங் மிஷினுக்கு ஒப்புதல் கேட்டு தர்ணா appeared first on Dinakaran.

Related Stories: