திருப்பதியில் ஏழுமலையான் கோயிலில் ரூ.1.44 கோடி மதிப்புள்ள மின்சார பேருந்தை திருடியவர் கைது

திருமலை: திருப்பதியில் ஏழுமலையான் கோயிலில் பக்த்தர்களின் வசதிக்காக இலவச பேருந்துகள் இயக்கபட்டு வருகிறது. இந்த இலவச பேருந்தில் கடந்த 24-ம் தேதி பிரம்மோட்சவம் நடைபெற்ற போது, அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் பாதுகாப்பு பனியில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் மர்மநபர் பேருந்தை கடத்தி சென்றதாக போலீசாருக்கு தேவஸ்தான அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

இந்த தகவலை அடுத்து திருப்பதி எஸ்பி பரமேஸ்வர் ரெட்டி தலைமையில் 5 தனிபடை அமைத்து, சென்னை, பெங்களூரு, ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களில் தேடுதல் வேட்டை நடத்தினர். இந்த நிலையில் அதே நாளில் நெல்லூர் மாவட்டத்தில் இந்த பேருந்தானது கண்டுபிடிக்கபட்டது. இந்த பேருந்து மீட்கபட்டாலும், அதனை திருடி சென்றவர் குறித்து விசாரணை நடத்தபட்டது.

விசாரணையில் தேவஸ்தானத்திற்கு சொந்தமான மின்சார கார் கடந்த 20 நாட்களுக்கு முன்பு திருடபட்டது. இந்த காரை திருடியவரை தேவஸ்தான அதிகாரிகள் கண்டுபிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். ஆனால் தேவஸ்தான அதிகாரிகள் கார் தொலைந்தது குறித்து புகார் கொடுக்கவில்லை. அந்த நபரிடம் நடத்திய விசாரணையில் அவர் ஐதராபத்தை சேர்ந்த விஷ்னு என்பதும், அவர் திருமலையில் சுற்றிவருவதும் தெரியவந்தது.

இதனை அடுத்து அவரை எச்சரித்து விடுவித்தனர். இந்த நிலையில், இவரே திருப்பதி தேவஸ்தான பஸை திருடியது அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவானது. இதனை அடுத்து விஷ்னுவை பிடிப்பதற்காக போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை திருப்பதியில் உள்ள தனியார் பேருந்து நிலையம் அருகே சுற்றிவந்த விஷ்னுவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

The post திருப்பதியில் ஏழுமலையான் கோயிலில் ரூ.1.44 கோடி மதிப்புள்ள மின்சார பேருந்தை திருடியவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: