இடைவிடாமல் பெய்த மழை காரணமாக இந்தியா, நெதர்லாந்து அணிகளுக்கு இடையேயான பயிற்சி ஆட்டம் ரத்து

திருவனந்தபுரம்: இடைவிடாமல் பெய்த கனமழை காரணமாக இந்தியா, நெதர்லாந்து அணிகளுக்கு இடையேயான பயிற்சி ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. கடந்த 29ம் தேதி நடக்கவிருந்த முதல் பயிற்சி ஆட்டமும் மழையால் ரத்தான நிலையில், ரசிகர்கள் வேதனையடைந்துள்ளனர்.

நடப்பாண்டில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் வரும் 5ம் தேதி தொடங்க உள்ளது. இதற்கான பயிற்சி ஆட்டத்தில் தொடரில் பங்கேற்க உள்ள அணிகள் விளையாடி வருகின்றன. இந்நிலையில் இந்தியா, நெதர்லாந்து அணிகளுக்கு இடையேயான பயிற்சி ஆட்டம் திருவனந்தபுரம் கிரீன்ஃபீல்ட் சர்வதேச மைதானத்தில் இன்று நடைபெற இருந்தது.

போட்டி தொடங்கும் முன்பே மைதானத்தில் மழை பெய்ய தொடங்கியது. இதனால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. மழை நின்றபின் போட்டி தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இடைவிடாது பெய்த கனமழை காரணமாக போட்டி டாஸ் கூட போட முடியாத நிலை ஏற்பட்டதால் போட்டி கைவிடப்பட்டது.

ஏற்கனவே, இங்கிலாந்து அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டம் மழை காரணமாக ரத்து செய்யப்பட்ட நிலையில், இந்த போட்டியும் ரத்து செய்யப்பட்டது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பயிற்சி ஆட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட 2 போட்டிகளும் மழையால் ரத்தானதால் 1 பந்துகூட வீசவோ, எதிர்கொள்ளவோ போனதுஇந்திய ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

2 பயிற்சி ஆட்டம் ஒதுக்குப்பட்ட ஒரு பந்தைக் கூட எதிர்கொள்ளமல் இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடக்க போட்டியுடன் தொடரை தொடங்குகிறது இந்தியா. இப்போட்டியானது வருகிற 8ம் தேதி மதியம் 2 மணிக்கு நடைபெற உள்ளது.

இதையடுத்து வரும் 8ம் தேதி உலகக்கோப்பை போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்ள இந்திய அணி சென்னை செல்ல உள்ளது. பயிற்சி ஆட்டங்களில் பங்கேற்க முடியாமல் நேரடியாக ஆஸ்திரேலிய அணியை இந்திய அணி எதிர்கொள்வதை எண்ணி ரசிகர்கள் சிறிது கலக்கமடைந்துள்ளனர். வரும் 6ம் தேதி ஹைதராபாத்தில் நடக்கும் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் நெதர்லாந்து அணி கவனம் செலுத்த உள்ளது.

The post இடைவிடாமல் பெய்த மழை காரணமாக இந்தியா, நெதர்லாந்து அணிகளுக்கு இடையேயான பயிற்சி ஆட்டம் ரத்து appeared first on Dinakaran.

Related Stories: