டி.20 கிரிக்கெட் கால்இறுதியில் நேபாளத்திற்கு எதிராக இந்தியா அபார வெற்றி: ஜெய்ஸ்வால் அதிரடி சதம்

ஹாங்சோ: ஆசிய விளையாட்டு போட்டியில் ஆடவர் டி.20 கிரிக்கெட்டில் இன்று காலை நடந்த கால்இறுதி போட்டியில் இந்தியா-நேபாளம் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணியில் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 25, திலக் வர்மா 2, ஜிதேஷ் சர்மா 5 ரன்னில் அவுட் ஆகினர். மற்றொரு புறம் அதிரடியாக ஆடிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் 48 பந்தில், 8 பவுண்டரி, 7 சிக்சருடன் சதம் விளாசினார். ஆனால் அடுத்த பந்தில் அவர் அவுட் ஆனார்.

20 ஓவரில் இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 202 ரன் எடுத்தது. ரிங்குசிங் 15 பந்தில் 2 பவுண்டரி, 4 சிக்சருடன் 37, ஷிவம்துபே 19 பந்தில் 2 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 25 ரன் எடுத்து களத்தில் இருந்தனர். பின்னர் களம் இறங்கிய நேபாளம் அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்களே எடுத்தது. இதனால் 23 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றிபெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது. இந்திய பவுலிங்கில் ரவி பிஷ்னோய், அவேஷ் கான் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

The post டி.20 கிரிக்கெட் கால்இறுதியில் நேபாளத்திற்கு எதிராக இந்தியா அபார வெற்றி: ஜெய்ஸ்வால் அதிரடி சதம் appeared first on Dinakaran.

Related Stories: