ஆசிய விளையாட்டு கபடியில் வங்கதேசத்தை பந்தாடிய இந்தியா: 55-18 என வெற்றி

ஆசிய விளையாட்டு போட்டியில் ஆடவர் கபடியில் ஏ பிரிவில் இந்தியா, ஜப்பான், வங்கதேசம், தாய்லாந்து, சீனதைபே, பி பிரிவில் ஈரான், பாகிஸ்தான், தென்கொரியா, மலேசியா இடம் பெற்றுள்ளன. லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் 2 இடம் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.

ஏ பிரிவில் இந்தியா இன்று தனது முதல் லீக் போட்டியில் வங்கதேசத்துடன் மோதியது. கேப்டன் பவுன்குமார் செராவத் தலைமையிலான இந்தியா தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியது முடிவில் 55-18 என்ற புள்ளி கணக்கில் இந்தியா அபார வெற்றி பெற்றது. நாளை காலை 6 மணிக்கு 2வது போட்டியில், தாய்லாந்துடன் இந்தியா மோதுகிறது.

The post ஆசிய விளையாட்டு கபடியில் வங்கதேசத்தை பந்தாடிய இந்தியா: 55-18 என வெற்றி appeared first on Dinakaran.

Related Stories: