சுடுகாட்டு கொட்டகை இடிந்து விழுந்து தொழிலாளி பலி

மன்னார்குடி: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த புள்ளமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன் (65). விவசாய கூலி தொழிலாளி. நேற்றுமுன்தினம் காலை தனது மாட்டை வயலில் மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். மாலை ஆகியும் மாடு வீடு திரும்பாததால் சீனிவாசன் மாட்டை தேடிச் சென்றார். புள்ளமங்கலத்தில் இருந்து 1 கி.மீ. தூரமுள்ள வடவேற்குடி வெண்ணாற்றங்கரைக்கு மாட்டை தேடி சென்ற அவர், அங்குள்ள சுமார் 20 ஆண்டு பழமையான சுடுகாட்டு கொட்டகையின் கீழ் அமர்ந்திருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக கொட்டகை அடியோடு இடிந்து விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த சீனிவாசன் சம்ப இடத்திலேயே உயிரிழந்தார். இரவு நேரமானதால் இது யாருக்கும் தெரியவரவில்லை.

The post சுடுகாட்டு கொட்டகை இடிந்து விழுந்து தொழிலாளி பலி appeared first on Dinakaran.

Related Stories: