மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநில தேர்தல் தொடர்பான மத்திய தேர்தல் குழு கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்க நான் டெல்லி செல்கிறேன். நீங்கள் நினைப்பதுபோல எதுவும் இல்லை. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூட்டணி முறிவு குறித்து அறிக்கை தாக்கல் செய்துள்ளதாக செய்திகள் வெளிவருகிறது. ஆனால், இதுவரை அதுபோன்று எதுவும் நடந்துள்ளதாக எனக்கு தெரியவில்லை. அது என் வேலையும் கிடையாது. நான் மகளிர் அணி தலைவராக, எம்எல்ஏவாக என் பணிகளை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறேன். பாஜ மாநில தலைவர் அண்ணாமலை டெல்லி வருகிறாரா? என்பது குறித்து எனக்கு தெரியாது. இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து நிருபர்கள், ‘‘அதிமுக, பாஜ கூட்டணி தொடருமா?’’ என கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளிக்காமல் சிரித்தபடி புறப்பட்டு சென்றார். அதிமுக-பாஜ கூட்டணி முறிவு குறித்து டெல்லியில் அமித்ஷாவை சந்திக்க பாஜ மாநில தலைவர் அண்ணாமலை நேற்று மாலை 3.20 மணிக்கு கோவையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். முன்னதாக அண்ணாமலை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘அரசியலில் என்னை விடுவித்தால் தோட்டத்துக்கு சென்று விடுவேன். தலைவர் பதவி வெங்காயம் மாதிரி. உரித்து பார்த்தால் எதுவுமே இருக்காது’ என்று விரக்தியுடன் தெரிவித்தார். அமித்ஷாவை சந்திப்பதற்கு முன் அண்ணாமலை இவ்வாறு கூறியது தலைவர் பதவியில் தொடருவாரா? அல்லது நீக்கப்படுவாரா? என்று பரபரப்பு எழுந்து உள்ளது.
The post அண்ணாமலை போறதே தெரியாதாம்… வானதி சீனிவாசன் திடீர் டெல்லி பயணம்: ‘நீங்க நினைக்கிறமாதிரி எதுவும் இல்லை’ என அலறல் appeared first on Dinakaran.
