உலக கோப்பை கிரிக்கெட் வர்ணனையாளர் குழுவில் தரமான ஸ்பின்னர் ஒருவர்கூட இல்லை: சிவராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு

சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் லட்சுமணன் சிவராமகிருஷ்ணன் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
“இந்தியாவில் நடைபெறும் இந்த உலகக்கோப்பை தொடரின் வர்ணனையாளர் குழுவில் ஒரு தரமான ஸ்பின்னர்கூட இல்லை. அப்படியானால் எப்படி மக்கள் சுழல் பந்து வீச்சை பற்றி தெரிந்து கொள்வார்கள். எனவே பேட்ஸ்மேன்களுக்கும் சில வெள்ளையான வர்ணனையாளர்களுக்கு மட்டுமே எல்லாம் தெரியும் என்பது போல் இந்த பரிதாபமான கலவை உருவாக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். அதற்கு ஒரு ரசிகர், ஒருவேளை சமீப காலங்களில் இந்திய பேட்ஸ்மேன்கள் ஸ்பின்னர்களுக்கு எதிராக தடுமாறுவதால் இப்படி இருக்கலாம். இருப்பினும் ஆரம்பகட்ட விக்கெட்டுகள் விழுந்தால் அதை பேட்டிங்கில் கணிசமாக சரி செய்யக்கூடிய அஸ்வினை நாம் தேர்ந்தெடுத்துள்ளோம்.

இம்முறை பிட்ச்கள் ஃபிளாட்டாகவும் சுழலுக்கு சாதகமாகவும் இருக்காது, என தெரிவித்துள்ளார். அதற்கு சிவராமகிருஷ்ணன் “இந்திய மண்ணில் இருக்கும் பிட்ச்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் அதிக விக்கெட்டுகளை எடுக்க வேண்டும் என்பதற்காக வேண்டுமென்றே சுழலுக்கு சாதகமாக உருவாக்கப்படுகின்றன. அதனாலேயே இந்திய பேட்ஸ்மேன்கள் சுழலுக்கு எதிராக தடுமாறுகின்றனர். வேண்டுமானால் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் அஸ்வினின் ரெக்கார்டை எடுத்துப் பாருங்கள், என பதில் அளித்துள்ளார்.

The post உலக கோப்பை கிரிக்கெட் வர்ணனையாளர் குழுவில் தரமான ஸ்பின்னர் ஒருவர்கூட இல்லை: சிவராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: