போராட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மயக்கம்

சென்னை: சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உண்ணாவிரத போராட்டத்தின்போது மயங்கி விழுந்த 50க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கடந்த செப்டம்பர் 28ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஆசிரியர்கள் அறிவித்தனர். ஏற்கெனவே அறிவித்தபடி நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகன் வளாகத்தில் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர். மேலும், தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதால் 50 ஆசிரியர்கள் பலர் மயங்கி விழுந்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மயங்கி விழுந்த ஆசிரியர்கள் கீழ்ப்பாக்கம், ராயப்பேட்டை அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.

The post போராட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மயக்கம் appeared first on Dinakaran.

Related Stories: