புதுடெல்லி: காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் பரிந்துரைப்படி, தமிழ்நாட்டிற்கு அக்.15ம் தேதி வரை வினாடிக்கு 3000 கனஅடி நீர் திறந்துவிடுமாறு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதி ராக கர்நாடகா சார்பில் நேற்று சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘‘மாநிலத்தில் போதிய மழை கிடையாது. அதனால் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்று குழு ஆகியவை தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 3000 கன அடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று பிறப்பித்த உத்தரவை மறுஆய்வு செய்ய வேண்டும். இதுபோன்ற உத்தரவுகளால் கர்நாடகாவில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படுகிறது. குறிப்பாக கர்நாடகாவில் உள்ள நீர் தேக்க அணைகளில் போதிய தண்ணீர் கிடையாது. பெங்களூரு போன்ற நகரங்களுக்கு குடிநீர் வழங்குவதே மிகவும் சிரமமாக இருந்து வருகிறது. அதனால் தான் நாங்கள் தமிழ்நாட்டுக்கு தற்போது இருக்கும் சூழலில் தண்ணீர் திறந்து விட முடியாது என திட்டவட்டமாக தெரிவிக்கிறோம். இந்த கோரிக்கையை உடனடியாக ஆணையம் பரிசீலிக்க வேண்டும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post காவிரி மேலாண்மை ஆணையத்தில் கர்நாடகா அரசு சீராய்வு மனு appeared first on Dinakaran.