மாற்றத்தை உணர்கிறேன்: கோஹ்லி சொல்கிறார்

மும்பை: இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் விராட்கோஹ்லி கூறுகையில், 2019ஆம் ஆண்டு நவம்பருக்கு பின் என் வாழ்க்கையில் கடினமாக காலமாக அமைந்தது. அந்த 3 ஆண்டுகளுக்கு பின் மிகப்பெரிய மாற்றத்தை உணர்கிறேன். வெறும் கிரிக்கெட் வீரராக மட்டுமல்லாமல், மனிதனாகவும் மாறி இருக்கிறேன். அதனால் சதம் விளாசிய பின்னரோ, விக்கெட் வீழ்த்திய பின்னரோ கோபமாகவும், ஆக்ரோஷமாகவும் கொண்டாடியதை எல்லாம் கடந்த காலமாக பார்க்கிறேன்.

நான் கடினமான காலகட்டத்தில் இருந்தபோது எனக்கு ஏராளமான அறிவுரை வந்தது. ரசிகர்கள் பலரும் நான் இதனை தவறாக செய்கிறேன். அதனை தவறாக செய்கிறேன் என்று சொல்லிக்கொண்டே இருந்தார்கள். ஆனால் நான் மகிழ்ச்சியாக களத்தில் செயல்பட்ட அத்தனை வீடியோக்களையும் அமர்ந்து பார்த்தேன். அதில் டைமிங், அணுகுமுறை எல்லாமே சரியாக இருந்தது. இதனால் என் தலைக்குள் என்ன ஓடுகிறது என்பதை யாரிடமும் வெளிப்படையாக சொல்ல முடியவில்லை’’ என்றார்.

The post மாற்றத்தை உணர்கிறேன்: கோஹ்லி சொல்கிறார் appeared first on Dinakaran.

Related Stories: