சென்னை அம்பத்தூரில் ஏசியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தாய், மகள் உயிரிழப்பு

சென்னை: சென்னை அம்பத்தூரில் வீட்டில் ஏசி தீப்பிடித்து ஏற்பட்ட விபத்தில் தாய், மகள் உயிரிழந்துள்ளனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேனாம்பேடு இந்திரா நகரில் வீட்டில் ஏசி தீப்பிடித்து ஏற்பட்ட விபத்தில் தாய் ஹலினா, மகள் நஸ்ரியா உயிரிழந்தனர். நேற்றிரவு வீட்டில் உள்ள ஏசியில் மின்கசிவால் ஏற்பட்ட விபத்தில் வயர்களில் தீப்பிடித்து எரிந்தது.

அம்பத்தூரில் ஏசி இயந்திரத்தில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக படுக்கையை அறையில் புகை சூழ்ந்தது மூச்சுத்திணறி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அம்பத்தூர் பகுதியை சேர்ந்த ஹலினா மற்றும் அவரது மகள் ஆகியோர் நேற்று இரவு வீட்டின் அறையில் உறங்கியுள்ளனர்.

அப்போது ஏசி இயந்திரத்தில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் படுக்கை அறை முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ளது. . புகை சூழ்ந்ததை கண்ட அக்கம்பத்தினர் உடனடியாக அம்பத்தூர் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் தாய், மகளை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இத தீ விபத்தில் வீட்டில் வைக்கப்பட்டிருந்த உடைமைகள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமாகியது. தந்தை இல்லாமல் தாய், மகள் ஆகியோர் தனியாக வசித்து வந்த நிலையில் இருவரும் தீ விபத்தில் உயிரிழந்தது அப்பகுதியினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

The post சென்னை அம்பத்தூரில் ஏசியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தாய், மகள் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: