தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு : நாள்தோறும் 1000 இடங்களில் காய்ச்சல் தடுப்பு முகாம் நடத்த பொது சுகாதாரத்துறை உத்தரவு!!

சென்னை : தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு காரணமாக நாளை முதல் நாள்தோறும் காய்ச்சல் தடுப்பு முகாம் நடத்த பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட சுகாதார இயக்குனர்களுக்கு பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில்,”தமிழ்நாட்டில் மழை காரணமாக சில மாவட்டங்களில் காய்ச்சல் மற்றும் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கூட்டம் காணப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு நாளை முதல் 1000 இடங்களில் நாள்தோறும் இலவச காய்ச்சல் முகாம் நடத்த வேண்டும்,” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்ட கிராமங்கள், நகராட்சிகள், மாநகராட்சிகள் பகுதிகளில் காலை 9 மணியில் இருந்து 4 மணி வரை முகாம்களை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகளுக்கு சென்று மாணவர்கள் இடையே காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் மாணவர்களுக்கு காய்ச்சல், தலைவலி உள்ளிட்ட அறிகுறிகள் தெரியவந்தால் உடனடியாக உரிய சிகிச்சை பெற ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் மறு உத்தரவு வரும் வரை காய்ச்சல் முகாம்களை தொடர்ந்து நடத்தவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சல் பாதிப்பை கண்காணிக்க சிறப்பு அதிகாரிகளை சுகாதாரத்துறை நியமித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

The post தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு : நாள்தோறும் 1000 இடங்களில் காய்ச்சல் தடுப்பு முகாம் நடத்த பொது சுகாதாரத்துறை உத்தரவு!! appeared first on Dinakaran.

Related Stories: