தொடர்ந்து 10 நாட்களில் சவரனுக்கு ரூ.1520 குறைவு.. ரூ.43,000-க்கு கீழ் வந்த தங்கம் விலை : நகை பிரியர்கள் குஷி!!

சென்னை: தங்கம் விலை தொடர்ந்து 10 நாட்களில் சவரனுக்கு ரூ.1520 குறைந்துள்ளது. தங்கம் விலை கடந்த 2 மாதமாக ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. சில சமயங்களில் அதிரடியாக உயர்வதும் வாடிக்கையாக இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று தங்கம் விலை அதிரடியாக சரிவை சந்தித்தது. அதாவது கிராமுக்கு ரூ.70 குறைந்து ஒரு கிராம் ரூ.5,410க்கும், சவரனுக்கு ரூ.560 குறைந்து ஒரு சவரன் ரூ.43,280க்கும் விற்கப்பட்டது.

நேற்றும் தங்கம் விலை மேலும் குறைந்தது. நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.5,390க்கும், சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.43,120க்கும் விற்கப்பட்டது. இன்றைய கால நிலவரப்படி தங்கம் சவரனுக்கு ரூ. 240 குறைந்து ரூ.42,880க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ. 5,360க்கு விற்பனை ஆகிறது.

தொடர்ச்சியாக 10 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,520 வரை குறைந்துள்ளது. தொடர் விலை குறைவு நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் ஏராளமானோர் நகை வாங்க ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1.50 குறைந்து ரூ.76க்கு விற்பனை செய்யப்படுகிறது.

The post தொடர்ந்து 10 நாட்களில் சவரனுக்கு ரூ.1520 குறைவு.. ரூ.43,000-க்கு கீழ் வந்த தங்கம் விலை : நகை பிரியர்கள் குஷி!! appeared first on Dinakaran.

Related Stories: