கிராம, நகர்ப்புறங்களில் ஆடுகளுக்கு தடுப்பூசி முகாம்: கலெக்டர் தகவல்

கரூர், செப். 30: கரூர் மாவட்ட கலெக்டர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் வளர்க்கப்படும் செம்மறி ஆடுகள் மற்றும் வெள்ளாடுகளுக்கு கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் ஆட்கொல்லி நோய் தடுப்பூசிபோடும் பணிகள் செப்டம்பர் 27ம்தேதி துவங்கி ஒரு மாத காலத்தில் அனைத்து கிராமங்களிலும் முகாம் அமைக்கப்பட்டு, தடுப்பூசிகள் போடப்படவுள்ளன.

மேலும் கருர் மாவட்டத்தில் 2,63,792 செம்மறி ஆடுகள், 2,28,249 வெள்ளாடுகள் என மொத்தம் 4,92,041 ஆடுகளுக்கு 4,92,000 டோஸ்கள் தடுப்பூசி மருந்துகள் பெற்று போடப்படவுள்ளது. 4 மாதத்திற்கு மேல் உள்ள அனைத்து ஆட்டுக் குட்டிகளுக்கும் இந்த தடுப்பூசியை போட்டுக் கொள்ளலாம். இந்த முகாம்கள் செப்டம்பர் 27ம்தேதி முதல் அக்டோபர் 26ம்தேதி வரை 30 நாட்கள் நடைபெறுகிறது. எனவே, பொதுமக்கள் அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு தடுப்பூசியை இலவசமாக போட்டுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கிராம, நகர்ப்புறங்களில் ஆடுகளுக்கு தடுப்பூசி முகாம்: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: