மழைக்காலம் துவங்கும் முன் கால்வாய்கள் தூர்வார நடவடிக்கை: கானாடுகாத்தான் பேரூராட்சி தலைவர் தகவல்

 

காரைக்குடி, செப். 30: காரைக்குடி அருகே கானாடுகாத்தான் பேரூராட்சி மாதாந்திர கவுன்சிலர் கூட்டம் நடைபெற்றது. தலைவர் ராதிகா ராமச்சந்திரன் தலைமை வகித்தார். துணை தலைவர் சோலைராஜன், செயல் அலுவலர் ரமேஷ்பாபு முன்னிலை வகித்தார். கிளர்க் ரவிச்சந்திரன் தீர்மானங்களை வாசித்தார். இதில் வார்டு உறுப்பினர்கள் செட்டிநாடு பாலு, ஜெய்கணேஷ், கருப்பையா, ராமசாமி, பாண்டிச்செல்வம், அன்புக்கரசி, சுரேகா, கற்பகம், வசந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் வார்டு உறுப்பினர் செட்டிநாடுபாலு பேசுகையில், ‘மழைக்காலம் துவங்க உள்ளதால் மழைநீர் செல்லும் கால்வாய்களை தூர்வாரி சுத்தம் செய்து தர வேண்டும்’ என்றார்.

தலைவர் ராதிகா பேசுகையில், ‘மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம். வார்டு உறுப்பினர்கள் தெரிவித்த கோரிக்கைகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றப்படும். மழைக்காலம் துவங்க உள்ளதால் அனைத்து கால்வாய்களும் தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும். முன்னுரிமை அடிப்படையில் அனைத்து வளர்ச்சி திட்டங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. செயல் அலுவலர் ரமேஷ்பாபு பேசுகையில், ‘வார்டு உறுப்பினர்களின் கோரிக்கைகளுக்கு ஏற்ப திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது’ என்றார்.

The post மழைக்காலம் துவங்கும் முன் கால்வாய்கள் தூர்வார நடவடிக்கை: கானாடுகாத்தான் பேரூராட்சி தலைவர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: