வீட்டுமனை பட்டா கேட்டு மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ஆலங்குளம், செப். 30: ஆலங்குளத்தில் ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் வீடு இல்லாத ஏழைகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா கேட்டு 6 வருடங்களாக மனு கொடுத்தும் கண்டுகொள்ளாத தாசில்தாரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க தலைவர் மல்லிகா தலைமை வகித்தார். செயலாளர் சசிகலா, துணை செயலாளர் வசந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் இடம், வீடு, வீட்டுமனை இல்லாத ஏழைகளுக்கு அரசு புறம்போக்கு நிலத்தில் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு மனு கொடுத்திருந்தும், மனு மீது நடவடிக்கை எடுக்காத ஆலங்குளம் தாசில்தாரை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மாதர் சங்கத்தை சேர்ந்த மாரியம்மாள், ஜெயா, சந்திரா, சேர்மக்கனி, சக்திசெல்வம், கார்த்திகா, கிருஷ்ணவேணி, சுப்புலட்சுமி, மேரி உட்பட பலர் கலந்து கொண்டனர். பொருளாளர் அழகுசுந்தரி நன்றி கூறினார்.

The post வீட்டுமனை பட்டா கேட்டு மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: