ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ் என பெரும்பான்மையான வீரர்கள் ஆட்டத்திறனில் இருப்பது கூடுதல் பலம். அதே நேரத்தில் இந்திய அணியும் சமீபத்திய தொடரில் ஆஸி அணியை 2-1 என்ற கணக்கில் வென்று அசத்தியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு 6 நாடுகள் பங்கேற்ற ஆசிய கோப்பையையும் வென்று வென்று சாதித்திருக்கிறது. அதனால் இங்கிலாந்தை விட கூடுதல் உற்சாகமாக களம் காணப் போகிறது ரோகித சர்மா தலைமையிலான இந்தியா. எப்படி இருந்தாலும் இரு அணிகளும் தங்கள் வீரர்களின் ஆட்டத்திறனை பரிசோதித்துக் கொள்ள நல்ல வாய்ப்பு. எனவே இன்று பல பரிசோதனை முயற்சிகளை களத்தில் காணலாம். நேரடி ஒளிபரப்பு என்பதால் ரசிகர்களுக்கு நல்ல விருந்தாகவும் இந்த ஆட்டம் அமையும்.
* ஆஸி-நெதர்லாந்து
இன்று நடைபெறும் மற்றொரு பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. பல முறை சாம்பியனான ஆஸியும், அறிமுக அணிகளில் ஒன்றான நெதர்லாந்தும் மோதும் ஆட்டம் திருவனந்தபுரத்தில் நடக்கிறது.
கடைசியாக…
* இதுப் போன்ற அதிகாரபூர்வமற்ற ஒரு நாள் ஆட்டங்களில் இந்த இரு அணிகளும் கடைசியாக மோதிய 5 ஆட்டங்களில் இங்கிலாந்து 4-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது.
* 2011ம் ஆண்டுக்கு பிறகு இன்றுதான் இந்த 2 அணிகளும் இதுப்போன்ற அதிகாரபூர்வமற்ற ஆட்டத்தில் களம் காண உள்ளன.
* இரு அணிகளும் கடைசியாக மோதிய 6 சர்வதேச ஆட்டங்களில் இந்தியா 4-2 என்ற கணக்கில் முன்னலையில் உள்ளது.
* இந்த 2 அணிகளும் இதுவரை மோதிய 106 சர்வதேச ஆட்டங்களில் இந்தியா 57ஆட்டங்களிலும், இங்கிலாந்து 44 ஆட்டங்களிலும் வென்று இருக்கின்றன. மேலும் 3 ஆட்டங்கள் கைவிடப்பட, 2ஆட்டங்கள் சரிநிகர் சமனில் முடிந்துள்ளன.
The post உலக கோப்பை பயிற்சி ஆட்டம்: நடப்பு சாம்பியனுடன் மோதும் இந்தியா appeared first on Dinakaran.
