மீனவர்கள் நலன் காக்க ரூ.1 கோடி மதிப்பில் சுழல் நிதி உருவாக்கப்படும்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை: மீனவர்கள் நலன் காக்க ரூ.1 கோடி மதிப்பில் சுழல் நிதி உருவாக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள செய்தியில் எதிர்பாராமல் கடலில் ஏற்படும் அசாதாரண சூழ்நிலை மற்றும் இயற்கை சீற்றங்களின் காரணமாக விபத்தில் சிக்கி 2016 முதல் 2021 ஆம் ஆண்டு வரை நிலுவையாக உள்ள 25 மீனவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கிட ரூ.50 லட்சம் மற்றும் இனிவரும் காலங்களில் பாதிக்கப்படும் மீனவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ரூ. 50லட்சம் ஆக மொத்தம் ரூ.1 கோடி கொண்டு சுழல் நிதி உருவாக்குதல்.

எதிர்பாராமல் கடலில் ஏற்படும் அசாதாரண சூழ்நிலை மற்றும் இயற்கை சீற்றங்களின் காரணமாக விபத்தில் சிக்கி காணாமல் போன மீனவர்களின் குடும்பங்கள் எந்த வருமானமும் இன்றி வறுமைக் கோட்டிற்கு கீழ் செல்லும் நிலையில் உள்ளதால், மீனவர் நலனில் அக்கரை கொண்டுள்ள இவ்வரசு அம்மீனவர்களின் துயர் துடைக்க சுழல் நிதியினை உருவாக்கி அதிலிருந்து காணாமல் போன மீனவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 2லட்சம் வழங்கும் பட்சத்தில் வாழ்வாதாரம், பொருளாதார ரீதியாக மேம்படுத்திக் கொள்ள பேருதவியாக அமையும் என்பதால், 2016 முதல் 2021ம் ஆண்டு வரை நிலுவையாக உள்ள 25 மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் வீதம் நிவாரணம் வழங்கிட ரூ.50 லட்சமும் இனிவரும் காலங்களில் பாதிக்கப்படும் மீனவர்களுக்கு விரைவில் நிவாரணம் வழங்குவதற்காக ரூ.50 லட்சமும் ஆக மொத்தம் ரூ.1கோடி கொண்டு சுழல் நிதி உருவாக்கி அரசாணை வெளியிட்டுள்ளது.

 

The post மீனவர்கள் நலன் காக்க ரூ.1 கோடி மதிப்பில் சுழல் நிதி உருவாக்கப்படும்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: