இலையின் இணையை தெர்மோகோல் மாஜி அமைச்சர் ஏன் போட்டு தாக்கினார் என்ற ரகசியத்தை சொல்கிறார்: wiki யானந்தா

‘‘இரு ‘குரூப்’புக்கும் இடையில் நடக்கும் பனிப்போரால் யாருக்கு அடி விழுகிறது…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘வெயிலூர்  மாவட்ட மத்திய சிறையில செல்போன், கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட  பொருட்களை கண்காணிக்கும் க்யூஆர் டீம் இருக்கு. இந்த டீமில் இருக்கும்  காவலர்கள், தான் சொல்வதை மற்ற காவலர்கள் கேட்க வேண்டும் என்ற நிலை இருந்து  வந்ததாம். க்யூஆர் காவலர்களின் இந்த ஆட்டத்தால், சிறை காவலர்கள் பலர்  மனஉளைச்சலுக்கு தள்ளப்பட்டார்களாம். மேலும் ஆய்வு செய்வதாக கூறி சிறைக்குள்  கைதிகளை அடித்து துன்புறுத்துகிறார்களாம். எதுக்காக தங்களை அடிக்கிறார்கள்  என்பது தெரியாமல், வலியுடன் புலம்பி வர்றாங்களாம். இவங்க குரூப் சண்டையில  எங்களை அடித்து அவங்க கோபத்தை தணித்து கொள்வது என்ன நியாயம் என்று  வேதனையோடு பேசிக்கிறாங்க. இதுக்கு முக்கிய காரணமே, சிறையில் விஜிலென்ஸ்  போலீசாருக்கும், க்யூஆர் டீம் காவலர்களுக்கும் இடையே நடக்கும் நாட்டாமை  பிரச்னை தானாம். இந்த பொருத்தத்தால் பிரேமானவருக்கும், மன்மதனுக்கும்  எப்போதும் மோதல்தானாம். இந்த பனிப்போரில் விஜிலென்ஸ் காவலருக்கே  வெற்றியாம். அவர் பேச்சை கேட்டு, க்யூஆர் டீமில் உள்ள 2 காவலர்களை வேறு  இடத்துக்கு மாற்றிட்டாங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘இலை கட்சியின் இணையை ‘லெப்ட்-ரைட்’ என்று வாங்குவது யாரு…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘இலைக்கட்சிக்குள்    சின்ன மம்மியை இழுப்பதில் தேனிக்காரருக்கு ரொம்ப சப்போர்ட் செய்து  வருகிறார் தெர்மகோல் மாஜி மந்திரி. தூங்கா நகரத்தில் உள்ள தனது   முக்கிய  ஆதரவாளர்களிடம் சமீபத்தில் ஆலோசனை நடத்தினாராம். கூட்டத்தில், ‘கட்சிக்கு  இரட்டை தலைமை இருப்பது நல்லது என்றுதான் இருந்தேன். சட்டமன்ற தேர்தலில்  எனது நெருங்கிய ஆதரவாளர்களுக்கு 3 சீட் கேட்டு சிபாரிசு   செய்தேன். அதனை  இலை கட்சியின் ‘இணை’யானவர் ஏற்க மறுத்து, சீட் தரவில்லை.  இட  ஒதுக்கீடு  பிரச்னை, தாமரையுடன் கூட்டணி வேண்டாம். இதனால்   தென்மாவட்டங்களிலும்,  மாநில அளவில் கட்சியின் வெற்றிக்கு பாதிக்கும்   என்றேன். அதையும் அவர்  காதில் போட்டுக் கொள்ளவில்லை. இனி ‘இணையை’   நம்பினால் கட்சியை நம்பி உள்ள  நமக்கு சிக்கல்தான் வரும். சின்ன மம்மி   கட்சியில் வந்தால்தான் நம்மால்  முன்னேற முடியும். எனக்கு ஆதரவு   கொடுங்க…’’ என்று தடாலடியாக பேசியதாக தகவல்  கசிந்து இருக்கு. அதற்கு அவரது ஆதரவாளர்களோ, ‘நீங்கள்   எடுக்கும்  முடிவுக்கு ஆதரவு தர்றோம்ணே. இருந்தாலும் கட்சியும், சின்னமும்   யார்  பக்கம் இருக்கிறதோ அங்கும் ஆதரவு தரணும்ல. அதனால கொஞ்ச  காலத்துக்கு  இணை –  துணை ரெண்டு பேரின் துணையும் நமக்கு தேவைண்ணே…’ என  ஒரே போடாக   போட்டுள்ளனர். இதனால்  தெர்மகோல் மாஜி மந்தரி அதிர்ச்சி அடைந்தாராம். நாம  அடித்த பந்து நம்மை நோக்கியே திரும்புதே என்று புலம்பினாராம். இப்போதைக்கு  அமைதி காப்போம். எலக்‌ஷன் நேரத்துல மத்தத பார்த்தக்கலாம் என்று  வேற எதையும் பேசாம  இடத்தை காலி செய்தாராம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘ இலை கட்சியினர் மீதே ஏன் இலை கட்சியினர் புகார் கொடுக்கப்போறாங்க.. விஷயம் என்னவாம்…’’ விசாரித்தார் பீட்டர் மாமா. ‘‘கன்னியாகுமரி  மாவட்டத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றியதாக ஏராளமான புகார்கள்  வருதாம். ரேஷன் கடை பணியில் தொடங்கி போக்குவரத்து, மின்சாரம், ஆவின் என    பல்வேறு துறைகளில் வேலை வாங்கி தருகிறேன் என லட்சக்கணக்கில் மோசடியாம்.  சொந்த கட்சிக்காரங்க மகள், மகனுக்கு வேலை வாங்கி தருகிறேன்   என்று கூட  பணம் வசூல் நடந்துள்ளது. இலை கட்சியின் மகளிரணி உள்பட பல்வேறு அணி    பொறுப்பாளர்கள் பலர், அரசு வேலைக்கு ஆசைப்பட்டு பணம் கொடுத்தது    மட்டுமில்லாமல், தனக்கு தெரிந்த நபர்களிடமும் பணத்தை வாங்கி    கொடுத்துள்ளனர். இவ்வாறு பணத்தை வாங்கியவர்கள் கப்சிப் ஆகி விட்டதால்    பணத்தை திரும்ப பெற முடியவில்லை. போலீஸ் நடவடிக்கை தொடங்கி இருப்பதால் இனி    எஸ்.பி. அலுவலகத்தில் நாங்கள் புகார் அளிக்க போகிறோம் என இலை கட்சியின்   மகளிரணியை  சேர்ந்த ஒரு படையே களமிறங்க உள்ளதாம். எனவே விரைவில் இலையில்  உள்ள பல  முக்கிய நிர்வாகிகள் மீது காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில்   புகார்  குவியலாம் என அதே கட்சியினர் கிலியில் இருக்காங்க…’’ என்றார்  விக்கியானந்தா. ‘‘மாங்கனி மாவட்ட கலெக்‌ஷன் பற்றி ெசால்லுங்க…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘மாங்கனி  மாவட்டத்தில் மலைக்கோட்டை பகுதியில் கடந்த சில நாட்களாக லட்சக்கணக்கில்  வைத்து சூதாட்டம் கனஜோராக நடக்குதாம். அந்த ஏரியா பிரச்னையை பற்றி மாவட்ட  உயர் அதிகாரிக்கு தெரிவிக்க வேண்டிய போலீஸ் ஏட்டின் ஆதரவோடு, அவரின்  உறவினரே இந்த சூதாட்டத்தை நடத்துறாராம். இதனால அந்த பக்கத்திற்கு உள்ளூர்  காக்கிகள் போறதில்லையாம். அந்த காக்கிகளுக்கும் உரிய முறையில் கவனிப்பு  செய்யப்பட்டு வருதாம். தன்னோட ஊர் மட்டுமில்லாம பக்கத்தில் உள்ள கைலாசநாதர்  கோயில் இருக்கும் நகரிலும் சூதாட்டத்தின் கிளை கிளப்பை ரகசியமாக தொடங்கி  நடத்துறாங்களாம். இரண்டு இடத்தில் இருந்தும் காசு வந்து கொட்டுறதால  காக்கிகள் செம ஹேப்பியாக இருக்காங்களாம். சமீபத்தில் ஒவ்வொரு சமூக விரோத  செயலுக்கும் யார்.. யார்.. எவ்வளவு காசு பாக்குறாங்கனு மாவட்ட உயர் அதிகாரி  பட்டியல் வெளியிட்டாரு. ஆனா, அந்த பட்டியலுக்கு பங்கம் வராம நம்ம ஆளுங்க  நல்லாவே கல்லா கட்டுறாங்க என் நேர்மையான காக்கிகளின் வேதனையோடு  சொல்றாங்க…’’ என்றார் விக்கியானந்தா….

The post இலையின் இணையை தெர்மோகோல் மாஜி அமைச்சர் ஏன் போட்டு தாக்கினார் என்ற ரகசியத்தை சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Related Stories: