சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை இன்று சென்னை தலைமைச் செயலகத்தில், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சரும், இலங்கைத் தமிழர்களின் நலனுக்கான ஆலோசனைக் குழுவின் தலைவருமான செஞ்சி கே.எஸ். மஸ்தான் சந்தித்து, இலங்கைத் தமிழர்களின் நீண்ட கால சட்டத் தீர்வுகள் அடங்கிய இடைக்கால அறிக்கையினை சமர்ப்பித்தார்.
இந்நிகழ்வின்போது, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., குழுவின் உறுப்பினர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர் திருமதி ஆ. தமிழரசி, பொதுத்துறை செயலாளர் திரு. க. நந்தகுமார், இ.ஆ.ப., அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையர் மற்றும் உறுப்பினர்-செயலர் திருமதி ஜெசிந்தா லாசரஸ், இ.ஆ.ப., உள்துறை துணைச் செயலாளர் திருமதி சித்ரா, ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர் ஆணையாளர் திரு. சச்சிதானந்தவளன், கல்வியாளர் திரு இரா. இளம்பரிதி, அரசமைப்புச் சட்ட வல்லுநர் திரு. மனுராஜ் சண்முகசுந்தரம், ஈழ எதிலியர் மறுவாழ்வு கழகத்தின் செயலாளர் (OFERR) செல்வி சூரியகுமாரி, அட்வெண்டிஸ்ட் வளர்ச்சி மற்றும் மறுவாழ்வு நிறுவனத்தின் திட்ட இயக்குநர் (ADRA) திரு. இக்னேசியஸ், இயேசு சபை புலம்பெயர்ந்தோர் பணி இயக்குநர் அருட்தந்தை பால்ராஜ் மற்றும் பேராசிரியர் கே.எம். பாரிவேலர்ஆகியோர் உடனிருந்தனர்.
The post இலங்கைத் தமிழர் வாழ்வாதார முன்னேற்றத்துக்கான இடைக்கால அறிக்கையை முதல்வரிடம் சமர்ப்பித்தார் அமைச்சர் செஞ்சி மஸ்தான்..!! appeared first on Dinakaran.
