நெல்லை, செப். 29: நெல்லை மாவட்ட மீனவ கிராமங்களில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நெல்லை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை அடுத்த மாதம் துவங்குவதை முன்னிட்டு, மழை, வெள்ளம், சுனாமி, பேரிடர் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக தேசிய பேரிடர் மீட்பு படையினர் 14 பேர் கொண்ட குழுவினர் நெல்லை வந்துள்ளனர். இவர்கள் திசையன்விளை தாலுகாவிற்கு உட்பட்ட கடல் சீற்றம் அதிகமாக காணப்படும் பகுதியான உவரி, கூட்டப்பனை, குட்டம், கூடுதாழை பகுதிகளில் சுனாமி பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்டுள்ள 3 சுனாமி எச்சரிக்கை மணிகள் சரியாக செயல்படுகிறதா எனவும், மீனவர்களிடம் வானிலை சம்பந்தமான செய்திகள் தெரிகிறதா, கடலால் மண்அரிப்பு ஏற்படுகிறதா, புயல் உருவாகும் போது முன்னெச்ரிக்கையாக கிராம மக்கள் எவ்வாறு பாதுகாப்பாக இருக்க வேண்டும். தாழ்வான பகுதிக்கும், கடல் மட்டத்திற்கும் உள்ள இடைவெளி எவ்வளவு, மக்கள் தொகை எவ்வளவு, பாதுகாப்பு எவ்வாறு இருக்கிறது தேசிய பேரிடர் மீட்பு படையைச் சேர்ந்த பட்டாலியன் வீரர்கள் ஆய்வு செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்வில் திசையன்விளை தாசில்தார் முருகன், முதுநிலை வருவாய் ஆய்வாளர் ராமர் மற்றும் கிராம உதவியாளர்கள் உடன் இருந்தனர்.
The post நெல்லை மாவட்ட மீனவ கிராமங்களில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் விழிப்புணர்வு appeared first on Dinakaran.
