ரமேஷ் பிதுரிக்கு தேர்தல் பொறுப்பாளர் பதவி வெறுப்பு பேச்சுக்கு வெகுமதி தரும் பாஜ: எதிர்க்கட்சிகள் கடும் குற்றச்சாட்டு

புதுடெல்லி: புதிய நாடாளுமன்றத்தில் கடந்த வியாழக்கிழமை(செப்.21) சந்திரயான்-3 வெற்றி குறித்து விவாதம் நடைபெற்றது. அப்போது குறுக்கிட்டு பேசிய பகுஜன் சமாஜ் கடசியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் டேனிஷ் அலியை, பாஜவை சேர்ந்த தெற்கு டெல்லி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் பிதுரி தகாத வார்த்தைகளை பயன்படுத்தி ஆபாசமாக விமர்சித்துள்ளார்.

இந்நிலையில் ரமேஷ் பிதுரி ராஜஸ்தான் மாநில டோங்க் மாவட்ட பாஜ தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். வெறுப்பு பேச்சுக்கு பாஜ வெகுமதி கொடுத்துள்ளது என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. திரிணாமூல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்ரா, “ மோடி அவர்களே இதுதான் சிறுபான்மையினருக்கான உங்கள் அன்பின் வௌிப்பாடா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

சபாநாயகர் ஓம் பிர்லா நடவடிக்கை
புதிய நாடாளுமன்றத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டேனிஷ் அலியை பாஜ நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் பிதுரி தகாத வார்த்தைகளால் பேசினார். அவருக்கு சபாநாயகர் ஓம் பிர்லா எச்சரிக்கை விடுத்தார். இந்நிலையில் இதுதொடர்பான புகார்கள் அனைத்தையும் விசாரிக்க பாஜ நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் குமார் சிங் தலைமையிலான சிறப்பு உரிமை குழுவுக்கு ஓம் பிர்லா அனுப்பி உள்ளார்.

The post ரமேஷ் பிதுரிக்கு தேர்தல் பொறுப்பாளர் பதவி வெறுப்பு பேச்சுக்கு வெகுமதி தரும் பாஜ: எதிர்க்கட்சிகள் கடும் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: