சிப்காட் தொழிற்சாலையில் பேரிடர் மேலாண்மை ஒத்திகை

கும்மிடிப்பூண்டி: சிப்காட் தொழில்பேட்டையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பேரிடர் மேலாண்மை ஒத்திகை நடைபெற்றது. சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் ரசாயன கசிவு ஏற்படும் பட்சத்தில் அதனை, எவ்வாறு கையாள்வது என்பது குறித்த பேரிடர் மேலாண்மை மாதிரி ஒத்திகை பயிற்சி திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் பிரீத்தி தலைமை தாங்கினார். வட்டார போக்குவரத்து அலுவலர் ராஜராஜேஸ்வரி, சிப்காட் தீயணைப்பு அலுவலர்கள், தீயணைப்பு வீரர்கள், மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் உட்பட 250க்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில், பாதிக்கப்பட்ட நபர்களை எவ்வாறு மீட்டு முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்து, அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படை சார்பில் டீம் கமாண்டர் ராகுல் குமார் தலைமையில் வீரர்கள் செயல் விளக்கம் அளித்தனர். முடிவில், தொழிற்சாலை நிர்வாக மேலாளர் ரவீந்திரன் நன்றி கூறினார்.

The post சிப்காட் தொழிற்சாலையில் பேரிடர் மேலாண்மை ஒத்திகை appeared first on Dinakaran.

Related Stories: