காஞ்சிபுரம் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் நேற்று இரவு சீனிவாசன் என்ற இளைஞர் அதிகாலையில் மது வைத்துக்கொண்டிருந்த நிலையில் அப்பகுதியில் வந்த மதுவிலக்கு போலீசார், சீனிவாசனை சோதனை செய்தபோது அதிகளவில் மதுபானங்களை வைத்திருந்ததால் அவரை கைது செய்து காவல்நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
அப்போது காஞ்சிபுரம் அடுத்த மாவட்ட ஆட்சியர் வளாகம் அருகே இருசக்கர வாகனத்தில் இருந்த சீனிவாசன் காவலர்களை மீறி தப்பிக்க முயன்றபோது எதிரே வந்த பேருந்தின் மீது மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். இதைத்தொடர்ந்து பலியான சீனிவாசன் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் லேசான பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
The post போலீசார் அழைத்துச்சென்ற இளைஞர் விபத்தில் பலி: காஞ்சி மருத்துவமனை அருகே உறவினர்கள் மறியல் appeared first on Dinakaran.