சகோதரத்துவமும் கருணையும் நம் சமூகத்தில் வளரட்டும்: மிலாது நபியை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து!

டெல்லி: மிலாது நபியை முன்னிட்டு பிரதமர் மோடி தனது X தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். மீலாதுன் நபி முகமது நபி அவர்களின் பிறந்த நாளைக் கொண்டாடுவதாகும். பாரம்பரிய சன்னி மற்றும் சீயா இஸ்லாமிய அறிஞர்கள் மீலாதுன்நபி கொண்டாட்டத்துக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளனர். நபிகள் நாயகத்தின் பிறந்த தினத்தைக் கொண்டாடுவது அவசியமானது என்று அவர்கள் கருதுகின்றதுடன், அது போற்றத்தக்க நிகழ்வு என்ற ரீதியில் நோக்குகின்றனர்.

நபிகளாரின் வழிமுறைக்கு மாறானது என எதிர்க்கின்றனர். சர்வசக்தியும் படைத்த இறைவன் தனக்கு துணையாக நிற்கும் போது எந்த சக்தியாலும் நம்மை வீழ்த்த முடியாது என்ற நம்பிக்கையை அனைவரின் மனதிலும் விதைத்தவர் நபிகளார் அவர்கள்.

வீரம், தியாகம், ஒழுக்கம், தூய்மையான அரசியல், யாருக்கும் அஞ்சாமை உள்ளிட்ட எண்ணற்ற சிறப்புகளுக்கு சொந்தக்காரராகவும் நபிகள் நாயகம் திகழ்ந்தார். மிலாது நபியை முன்னிட்டு பிரதமர் மோடி தனது X தள பதிவில்; மீலாது நபி நல்வாழ்த்துக்கள். சகோதரத்துவமும் கருணையும் நம் சமூகத்தில் வளரட்டும். அனைவரும் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கட்டும். ரமலான் என்று பதிவிட்டுள்ளார்.

 

The post சகோதரத்துவமும் கருணையும் நம் சமூகத்தில் வளரட்டும்: மிலாது நபியை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து! appeared first on Dinakaran.

Related Stories: