ஆண்டிபட்டி, செப். 28: தேனி திமுக தெற்கு மாவட்டம் மாணவரணி ஒன்றியம், நகரம், பேரூர் அமைப்பாளர், துணை அமைப்பாளருக்கு நேர்காணல் நாளை நடைபெற உள்ளது. தேனி திமுக தெற்கு மாவட்டத்தில் ஒன்றியம், நகரம், பேரூர் அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் பொறுப்புகளுக்கான நேர்காணல் வரும் 29ம் தேதி நாளை வெள்ளிக்கிழமை மதியம் 2 மணி அளவில் கம்பம் நகரம் அலுவலகத்தில் மாநில மாணவர் அணி துணை செயலாளர்கள் அதலை செந்தில் குமார், கோகுல், தேனி தெற்கு மாவட்ட செயலாளரரும் கம்பம் ராமகிருஷ்ணன் எம்எல்ஏ, ஆண்டிபட்டி மகாராஜன் எம்எல்ஏ, தேனி தெற்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பிரகாஷ் ஆகியோர்கள் தலைமையிலும், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர்கள் பிரபாகரன், பகலவன், சூர்யா, ரவிக்குமார், சத்யபிரபா ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற உள்ளது.
எனவே, ஒன்றியம், நகரம், பேரூர் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் பொறுப்புக்களுக்கு விண்ணப்பித்தவர்கள் இதில் கலந்து கொள்ளலாம். ஒவ்வொரு விண்ணப்பதாரர்களும் வயதை சரிபார்க்க, கல்வி சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அடையாள அட்டை, கட்சி உறுப்பினர் அட்டை கட்சியில் இதற்கு முன் பணியாற்றிய ஆவணங்களை கொண்டு வர வேண்டும் என்று திமுக தெற்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
The post தேனி தெற்கு மாவட்ட திமுக மாணவரணி நேர்காணல் appeared first on Dinakaran.